வில்லிவாக்கம், திருவள்ளூர் ஆகிய ஊராட்சி மன்ற தலைவர்களுடன் பல்வேறு திட்டங்கள், ஊராட்சி நிர்வாகம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து கலந்தாய்வு கூட்டம்

பதிவு:2023-03-22 09:36:22



வில்லிவாக்கம், திருவள்ளூர் ஆகிய ஊராட்சி மன்ற தலைவர்களுடன் பல்வேறு திட்டங்கள், ஊராட்சி நிர்வாகம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து கலந்தாய்வு கூட்டம்

வில்லிவாக்கம், திருவள்ளூர் ஆகிய ஊராட்சி மன்ற தலைவர்களுடன் பல்வேறு திட்டங்கள், ஊராட்சி நிர்வாகம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து  கலந்தாய்வு கூட்டம்

திருவள்ளூர் மார்ச் 22 : திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரக மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூட்டரங்கத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பாக வில்லிவாக்கம் மற்றும் திருவள்ளூர் ஆகிய கோட்டங்களுக்குட்பட்ட அனைத்து ஊராட்சி மன்ற தலைவர்களுடன் பல்வேறு திட்டங்கள், ஊராட்சி நிர்வாகம், பஞ்சாயத்து ராஜ் மற்றும் கிராம ஊராட்சி நிதி கையாளுதல் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தலைமையில் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.அப்பொழுது அவர் தெரிவித்ததாவது

அனைத்து ஊராட்சி மன்ற தலைவர்களுடனான திட்டங்கள் குறித்து நடைபெறும் இந்த ஒரு நாள் ஆய்வுக் கூட்டம் மற்றும் பயிற்சிப்பட்டறையில் கிராம ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு அவர்களின் கடமைகள் பொறுப்புகள் மற்றும் அதிகாரங்கள் குறித்து கூட்டத்தில் விளக்கப்பட்டுள்ளது.கிராம ஊராட்சி தலைவர்கள் மற்றும் செயலர்கள் ஆகியோரின் செயல்பாடுகள் எவ்வாறு இருக்க வேண்டும் என்பது குறித்தும் இங்கு எடுத்துரைக்கப்பட்டுள்ளது. வட்டார வளர்ச்சி அலுவலர்களுடன் ஒருங்கிணைப்பு செய்து எவ்வகையில் பணியாற்ற வேண்டும் என்பது குறித்தும் எடுத்துரைக்கப்பட்டுள்ளது.

மத்திய மாநில அரசுகளின் திட்டங்கள் குறித்தும் திட்ட நோக்க நிலை குறித்தும் இங்கு எடுத்துரைக்கப்பட்டுள்ளது. பஞ்சாயத்து ராஜ் திட்டங்கள் அதாவது 15-வது நிதி குழு மானியம் ராஷ்ட்டரிய கிராம சுவராஜ் அபியான் திட்டம் மாநில நிதி குழு மானியம் ஆகியவற்றை எவ்வகையில் மேற்கொண்டு பணிகளில் தேக்க நிலை ஏற்படாதவாறு செயல்பட வேண்டும் என்பது குறித்தும் இங்கு கலந்தாலோசிக்கப்பட்டு, ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளது. கிராம ஊராட்சிக்காக வழங்கப்படும் நிதியானது கிராம ஊராட்சி சொந்த வருவாயை மேம்படுத்துவது, இணைய வரி வசூல் செய்தல் முதல் மேற்கொள்ளப்பட வேண்டிய பல்வேறு பணிகள் குறித்தும் இங்கு எடுத்துரைக்கப்பட்டுள்ளது.

மேலும், எவ்வகையில் நிதிகளை கையாள வேண்டும் என்பது குறித்தும் ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு தெளிவாக எடுத்துரைக்கப்பட்டுள்ளது செலவினத்தை கட்டுப்படுத்தி பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்தும் முறையான நிதி பரிவர்த்தனையை மற்றும் நிதி மேம்பாட்டை கடைபிடிக்க வேண்டும் என்பது குறித்தும், வருமான வரியும், வருமான வரி பிடித்தமும் வருமான வரி அரசின் கணக்கில் செலுத்துவது காலாண்டு படிவம் தாக்கல் செய்வது குறித்தும் அனைத்து ஊராட்சி மன்ற தலைவர்களுக்கும் இங்கே தெளிவாக எடுத்துரைக்கப்பட்டுள்ளது. அனைவரும் இதனை முறையாக கடைபிடித்து தேக்க நிலை அடையாமல் உங்கள் ஊராட்சியை மேம்படுத்த தேவையான பணிகளை மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

கூட்டத்தில், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் (மகளிர் திட்டம்) திட்ட இயக்குநர் மலர்விழி, ஊராட்சிகள் உதவி இயக்குநர் ரூபேஷ்குமார், உதவி திட்ட அலுவலர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.