திருவள்ளூரில் உலக டவுன் சின்ரோம் தினத்தை முன்னிட்டு டவுன் சிண்ட்ரோம் குறித்து விழிப்புணர்வு நடைப்பேரணி : மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் துவக்கி வைத்து பங்கேற்பு

பதிவு:2023-03-22 09:40:06



திருவள்ளூரில் உலக டவுன் சின்ரோம் தினத்தை முன்னிட்டு டவுன் சிண்ட்ரோம் குறித்து விழிப்புணர்வு நடைப்பேரணி : மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் துவக்கி வைத்து பங்கேற்பு

திருவள்ளூரில் உலக டவுன் சின்ரோம் தினத்தை முன்னிட்டு டவுன் சிண்ட்ரோம் குறித்து விழிப்புணர்வு நடைப்பேரணி : மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் துவக்கி வைத்து பங்கேற்பு

திருவள்ளூர் மார்ச் 22 : திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உலக டவுன் சின்ரோம் தினத்தை தொடர்ந்து மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பாக டவுன் சிண்ட்ரோம் குறித்து விழிப்புணர்வு ஏற்படும் வகையில் நடைபெற்ற நடைப்பேரணியை மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் கொடியசைத்து துவக்கி வைத்து, அப்பேரணியில் கலந்துகொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தி பேசினார்.

பொதுவாக ஒருவருக்கு கூடுதல் குரோமோசோம் இருப்பதையே டவுன் சிண்ட்ரோம் என்று அழைக்கப்படுகிறது இது அறிவுசார் செயல்பாடுகளை பாதிக்கிறது. பகுப்பாய்வு சிந்தனை சிக்கலான சுருக்கங்கள் மற்றும் தீர்;ப்புகள் என்பது அறிவுசர் செயல்பாடுகள் போன்ற செயல்பாடுகளுக்கு பாதிப்பு ஏற்படுத்துகிறது.கல்வி கற்றல் என்பது டவுன் சிண்ட்ரோம் உள்ளவர்களில் பெரும்பாலோருக்கு ஒரு சவாலாக இருக்கலாம். ஆனால், அவர்கள் தன்னம்பிக்கை அடைய பலவிதமான திறன்களைக் கற்றுக்கொள்ளலாம்

ஆனால், அவர்களின் உணர்ச்சி மற்றும் சமூக வளர்ச்சி மற்ற குழந்தைகளைப் போலவே அதே நிலைகளைப் பின்பற்றுகிறது. அவர்களின் உணர்ச்சிகள் மற்றும் தேவைகள், அதே வயதினரைப் போலவே இருக்கும். குடும்பம், சமூகத்தை ஏற்று மரியாதை செய்வது அவர்களின் வளர்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கு ஒரு பெரிய ஆதரவாகும். உள்ளத்தில் அவர்கள் அழகான மனிதர்கள், அக்கறையுள்ள மற்றும் ஆதரவான சமூகம் அவர்களின் உண்மையான மனித திறனை வெளிக்கொணர உதவுகிறது என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து டவுன் சிண்ட்ரோம் குறித்து விழிப்புணர்வு ஏற்படும் வகையில் அமைக்கப்பட்ட கையெழுத்து இயக்கத்தில் மாவட்ட ஆட்சியர் கையெழுத்திட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினார். தொடர்ந்து ஆட்சியர் மனவளர்ச்சி குன்றிய மாணவ, மாணவியர்களுக்கு கேக் ஊட்டி கொண்டாடினார்.

இதில் மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ச.பாபு, ஆஷா, தொண்டு நிறுவன பிரதிநிதி சரவணன், பேச்சுப் பயிற்சியாளர் சுப்புலட்சுமி, முட நீக்கு வல்லுநர் ஆஷா, சைகை மொழிபெயர்ப்பாளர் சசிகலா, சிறப்பு பள்ளி ஆசிரியர்கள், மாணவ மாணவியர்கள், பெற்றோர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.