திருவள்ளூரில் நெகிழி ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு நடை பேரணி : தன்னார்வலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார் :

பதிவு:2022-04-25 18:16:43



திருவள்ளூரில் நெகிழி ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு நடை பேரணி : தன்னார்வலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார் :

திருவள்ளூரில் நெகிழி ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு நடை பேரணி : தன்னார்வலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார் :

திருவள்ளூர் ஏப் 25 : திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரக வளாகத்தில், வாக் ஃபார் பிளாஸ்டிக் தொண்டு நிறுவனத்தின் சார்பாக நெகிழி ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு நடை பேரணி நடைபெற்றது.பேரணியை மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் ஆல்பி ஜான் வர்கீஸ் தொடங்கி வைத்தார்.

இந்த நெகிழி ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு நடை பேரணி, திருமழிசை பேரூராட்சி பகுதியில் தொடங்கி வெள்ளவேடு, நேமம், அரண்வாயில், மணவாளநகர் வழியாக மாவட்ட ஆட்சியரகம் வரை நடைபயணமாக வந்த விழிப்புணர்வு பேரணியில் 100-க்கும் மேற்பட்ட வாக் ஃபார் பிளாஸ்டிக் இயக்கத்தினை சேர்ந்த தன்னார்வலர்கள் கலந்துக் கொண்டனர்,

அதனைத் தொடர்ந்து பேரணியில் கலந்து கொண்ட தன்னார்வலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கி, பாராட்டி பேசினார்.

சுற்றுச்சூழல் மாசடைவதற்கு மிக முக்கியமான காரணி. நாம் அதிகமாக பயன்படுத்தும் நெகிழி பொருட்களின் வளர்ச்சிதான். பிளாஸ்டிக் மூலம் வாகன உதிரி பாகங்கள், தண்ணீர் பைகள், பிளாஸ்டிக் குடங்கள், அணிகலன்கள் என பல தரப்பட்ட உபகரணங்கள் அனைத்தும் பிளாஸ்டிக்கால் செய்யப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த நெகிழியை அதிகமாக உபயோகிப்பதற்கான காரணம் இதை எடுத்துச் செல்வதற்கு மிக சுலபமாக இருப்பதாலும், விலை மலிவாக இருப்பதாலும் மக்கள் இதனை அதிகமாக பயன்படுத்தி வருகிறார்கள். என்னதான் பிளாஸ்டிக் பயன்படுத்துவதற்கு எளிதாக இருந்தாலும் அதனால் விளையும் தீமைகள் ஏராளம், இந்த நெகிழியை தயாரிக்கும் போது வெளிப்படும் ரசாயனக் கழிவுகள் நீர்நிலைகளில் கலந்து நீரை மாசுபடுத்துகிறது, அதுமட்டுமல்லாமல். நீர்நிலைகளில் வாழும் உயிரினங்களை பாதிப்பிற்குள்ளாக்குகிறது.

பிளாஸ்டிக் ஒரு மக்காத குப்பைகள். இவை எளிதில் மண்ணின் வளத்தை கெடுப்பது மட்டுமல்லாது, நிலத்தடி நீர் மட்டம் உயர்வதை தடுக்கிறது பாலித்தீன் கவர்கள் பல ஆண்டுகள் பூமியில் மக்காமல் அப்படியே இருக்கின்றன, மாறிவரும் இந்த பூமியின் வறண்ட நிலைக்கு முக்கிய காரணம் இந்த நிகழ்வுதான் முடிந்தவரை பாலிதீன் கவர்களை தயாரிக்காமல், உபயோகிக்காமல் இருக்கலாம் இதனால் பிளாஸ்டிக் மாசுகளை தவிர்க்கலாம். இந்த பூமி நம்முடைய தாய் போன்றது அதனை பாதுகாப்பதும், வளமையாக வைத்திருப்பதும் ஒவ்வொரு இந்திய குடிமகனின் கடமையாகும். நம்முடைய நாட்டில் ஏராளமான நன்மை வாய்ந்த இயற்கை பொருட்கள் உள்ளன. அதை பயன்படுத்துவோம் நெகிழியை ஒழிப்போம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.

இதில் வாக் ஃபார் பிளாஸ்டிக் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் கௌதம்,மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை உதவி திட்ட அலுவலர் (வீட்டுவசதி) சங்கரி, தன்னார்வலர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.