பதிவு:2023-03-26 22:13:40
ஈக்காடு துணை சுகாதார நிலையத்தில் உலக காசநோய் தினத்தை முன்னிட்டு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறையின் தேசிய காச நோய் ஒழிப்பு திட்டம் சார்பாக விழா
திருவள்ளூர் மார்ச் 25 : திருவள்ளூர் ஊராட்சி ஒன்றியம், ஈக்காடு துணை சுகாதார நிலையத்தில் உலக காசநோய் தினத்தை முன்னிட்டு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறையின் தேசிய காசநோய் ஒழிப்பு திட்டம் சார்பாக நடைபெற்ற விழாவில் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் ஆலோசனைகள் வழங்கி பேசினார்.
காசநோய் வந்தால் நான்கு மாதத்திலிருந்து முழுமையாக குணமடைய கூடிய ஒரு சூழ்நிலை உள்ளது. அதுமட்டுமின்றி, குடும்பத்தில் உள்ள உறுப்பினர்களில் யாரேனும் காசநோய் இருந்தால் இரத்தப்பரிசோதனை மூலம் தொற்று உள்ளவர்களுக்கு வருமுன் காப்போம் என்ற அடிப்படையில் காசநோய் தடுப்பு மருந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றி அளவிற்கு முன்னேற் இருக்கிறோம். உலகத்தில் இன்றைக்கும் நிறைய நபர்கள் காசநோயால் இறந்து கொண்டிருக்கிறார்கள். ஆகையால் முதலாவதாக விழிப்புணர்வு தேவைப்படுகிறது. இருமல் இருந்தாலும், மாலை நேரத்தில் காய்ச்சல் இருந்தாலும், அதிகப்படியாக சோர்வு இருந்தாலும் உடனடியாக நாம் அருகில் உள்ள சுகாதார மையத்தை அணுகி காசநோய்க்கு பரிசோதனை செய்ய வேண்டும். எனவே, அரசாங்கம் மூலம் நோய் கண்டறிவதற்கு நிறைய நிகழ்ச்சிகள் நடத்தி வருகிறோம். குறிப்பாக களப்பணிகள் மூலம் பரிசோதனை செய்து, டெஸ்ட் எடுக்கிறோம். நடமாடும் வாகனம் மூலமாகவும் பரிசோதனை செய்யப்படுகிறது.
Yes we can end TB என்று இன்று அணுசரிக்கப்படும் உலக காசநோய் தினத்தில் மூன்று விஷயங்களில் முதலாவதாக There is Gap In Identification of TB - அதற்கு போதுமான நடவடிக்கைகள் எடுக்கப்படும். There is Gap In Treatment of TB - அதற்கான நடவடிக்கைகளும் எடுக்க வேண்டும். மூன்றாவதாக விழிப்புணர்வு, காசநோய் என்பது மாத்திரை எடுக்கும் போது Transposable இல்லை. இது பாரம்பரியமாக வரக்கூடிய ஒரு நோய் கிடையாது. முழுமையாக சிகிச்சை பெறக்கூடிய ஒரு நோய். இதற்காக சமூகத்தில் இனியும் மக்களிடம் விழிப்புணர்வு சென்றைடைய வேண்டியுள்ளது. இதற்காக நாம் அனைவரும் சேர்ந்து உழைத்து செயல்பட வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து, திருவள்ளூர் ஊராட்சி ஒன்றியம், ஈக்காடு துணை சுகாதார நிலையம் பகுதியில் இன்று உலக காசநோய் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு ஏற்படும் வகையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறையின் தேசிய காச நோய் ஒழிப்பு திட்டம் சார்பாக அமைக்கப்பட்ட மனித சங்கிலி தொடர் விழிப்புணர்வு நிகழ்வையும், காசநோய் விழிப்புணர்வு கண்காட்சி அரங்கையும் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் நேரில் பார்வையிட்டார். தொடர்ந்து, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறையின் தேசிய காச நோய் ஒழிப்பு திட்டம் மூலமாக நடைபெற்ற விழாவில் காச நோயால் பாதிக்கப்பட்ட 50 நபர்களுக்கு தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சார்பாக தலா ரூ.3,000 வீதம் ரூ.1.50 இலட்சம் மதிப்பீட்டிலான ஊட்டச்சத்து உணவு பொருட்களையும் ஆட்சியர் இலவசமாக வழங்கினார்.
இதில் துணை இயக்குநர்கள் அ.லட்சுமி முரளி (காசநோய்), ஜவஹர்லால் (சுகாதாரப்பணிகள்), வசந்தி (தொழுநோய்), திருவள்ளூர் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் ஜெயசீலி ஜெயபாலன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், மருத்துவர்கள், செவிலியர்கள், தன்னார்வ தொண்டு நிறுவன பிரநிதிகள், பொதுமக்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.