முதலாவது ஆவடி புத்தகத் திருவிழா 8-ம் நாள் நிகழ்ச்சியில் “இப்படி இருக்கட்டும் இனி உன் உணவு” என்ற தலைப்பில் மருத்துவர்.கு.சிவராமன் கருத்துரை

பதிவு:2023-03-26 22:15:38



முதலாவது ஆவடி புத்தகத் திருவிழா 8-ம் நாள் நிகழ்ச்சியில் “இப்படி இருக்கட்டும் இனி உன் உணவு” என்ற தலைப்பில் மருத்துவர்.கு.சிவராமன் கருத்துரை

முதலாவது ஆவடி புத்தகத் திருவிழா 8-ம் நாள் நிகழ்ச்சியில் “இப்படி இருக்கட்டும் இனி உன் உணவு” என்ற தலைப்பில் மருத்துவர்.கு.சிவராமன் கருத்துரை

திருவள்ளூர் மார்ச் 25 : திருவள்ளூர் மாவட்டம், ஆவடி ர்ஏகு மைதானத்தில் நடைபெற்று வரும் முதலாவது ஆவடி புத்தகத் திருவிழா – 2023 மற்றும்; ”ஓயா உழைப்பின் ஓராண்டு, கடைக்கோடி தமிழரின் கனவுகளை தாங்கி” என்ற தலைப்பில் நடைபெறும் புகைப்படக் கண்காட்சி மற்றும் பல்துறை பணிவிளக்க கண்காட்சியின் 8-ம் நாள் நிகழ்ச்சியில் “சிந்தனை செய் மனமே” என்ற தலைப்பில் நகைச்சுவை நாவலர் மோகனசுந்தரம் மற்றும் “இப்படி இருக்கட்டும் இனி உன் உணவு” என்ற தலைப்பில் மருத்துவர்.கு.சிவராமன் ஆகியோர் கருத்துரை வழங்கினர்.

அதனைத் தொடர்ந்து ”ஓயா உழைப்பின் ஓராண்டு, கடைக்கோடி தமிழரின் கனவுகளை தாங்கி” என்ற தலைப்பில் செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பாக நடைபெற்று வரும் புகைப்படக் கண்காட்சியின் அக்கண்காட்சி அரங்கை ஏராளமான மாணவ, மாணவியர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பல்வேறு நபர்கள் பார்வையிட்டனர்.மேலும், "ஓயா உழைப்பின் ஓராண்டு, கடைக்கோடி தமிழரின் கனவுகளை தாங்கி” என்ற தலைப்பில் நடைபெற்று வரும் புகைப்படக் கண்காட்சி மற்றும் பல்துறை பணிவிளக்க கண்காட்சியின் கலை பண்பாட்டுத் துறையின் கலைக்குழுவினரின் கலை நிகழ்ச்சிகளை ஏராளமான பொதுமக்கள் கண்டு களித்தனர்.

மேலும் "முதலாவது ஆவடி புத்தகத் திருவிழாவின் 8-ம் நாளில் அமைக்கப்பட்ட புத்தக அரங்குகளை ஏராளமான மாணவ, மாணவியர்கள், வாசகர்கள் பொதுமக்கள் ஆகியோர் பார்வையிட்டு, புத்தக அரங்குகளில் புத்தகங்களை கொள்முதல் செய்தனர்.கடந்த இரண்டு நாட்களில் சுமார் 9000-ம் புத்தக வாசிப்பாளர்கள் இப்புத்தக திருவிழாவி;ற்கு வருகை தந்துள்ளனர். அதில் 8 இலட்சம் மதிப்பீட்டிலான புத்தகங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது என தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் (பபாசி) சங்கம் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலை மேலாண்மை இயக்குநர் ஜெ.மலர்விழி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) வி.எபினேசன், சிறுவர், சிறுமியர்கள், வாசகர்கள், பொதுமக்கள் மற்றும் பல்வேறு துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.