திருவள்ளூரில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ சார்பில் மனித சங்கிலி போராட்டம்

பதிவு:2023-03-26 22:19:56



திருவள்ளூரில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ சார்பில் மனித சங்கிலி போராட்டம்

திருவள்ளூரில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ சார்பில் மனித சங்கிலி போராட்டம்

திருவள்ளூர் மார்ச் 25 : திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி அருகே புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துதல் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ அமைப்பினர் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி சாலையின் முன்பு நடைபெற்ற மனித சங்கிலி போராட்டத்திற்கு ஜாக்டோ}ஜியோ ஒருங்கிணைப்பாளர் இரா.தாஸ் தலைமை வகித்தார். இதில் ஞானசேகரன், இளங்கோ ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த வேண்டும். சிறப்பு காலமுறை ஊதியம் பெற்று வரும் சத்துணவு, அங்கன்வாடி, வருவாய் கிராம உதவியாளர்கள், ஊராட்சி செயலாளர்கள், ஊர்ப்புற நூலகர்கள், கல்வித்துறையில் பணியாற்றும் துப்புரவு பணியாளர்கள் மற்றும் பகுதி நேர ஆசிரியர்கள் நிரந்தரம் செய்து வரையறை செய்த ஊதியம் வழங்க வேண்டும். அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 30 சதவீத பணியிடங்களை உடனே நிரப்பவும், அனைத்து பள்ளி, கல்லூரிகளில் ஆசிரியர்களை ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் மட்டும் பணியமர்த்துதல் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 2 மணிநேரம் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் உயர்மட்ட குழுவை அழைத்து பேசி நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் அடுத்த கட்டமாக மிகப்பெரிய போராட்டத்தில் ஈடுபட போவதாகவும் மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.தாஸ் எச்சரித்தார்.

இப்போராட்டத்தில் நிர்வாகிகள் தியாகு, பாண்டியன், மணிகண்டன், ஜம்பு, குப்புசாமி, சூர்யாசங்கர், கணேசன் மற்றும் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.