ராகுல் காந்தியின் பதவிப்பறிப்பு ஆணையை மக்களவை செயலர் உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் பேட்டி

பதிவு:2023-03-26 22:21:30



ராகுல் காந்தியின் பதவிப்பறிப்பு ஆணையை மக்களவை செயலர் உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் பேட்டி

ராகுல் காந்தியின் பதவிப்பறிப்பு ஆணையை மக்களவை செயலர் உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் பேட்டி

திருவள்ளூர் மார்ச் 25 : ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் நகரியில் சட்ட மாமேதை அம்பேத்கரின் திருவுருவ சிலை திறப்பு விழாவிற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் செல்லும் வழியில் திருவள்ளூரில் பல்வேறு இடங்களில் விடுதலைச் சிறுத்தை கட்சியினர் பிரமாண்ட வரவேற்பு அளித்தனர்.

அப்போது செய்தியாளர்களை சந்தித்த தொல் திருமாவளவன் கூறுகையில், பாரதிய ஜனதா கட்சியின் பாரதிய ஜனதா அரசின் மிக அற்பமான ஒரு அரசியல் விளையாட்டு, அவர் தேர்தல் பிரச்சாரத்தின் பொழுது பேங்களூரிலே குறிப்பாக கோளாரிலே பேசிய ஒரு பேச்சுக்காக குஜராத்தில் தனி நபர் ஒருவர் அவதூறு வழக்கு தொடுத்தார. அந்த வழக்கு விசாரணையில் அரசு தலையீடு செய்து இருக்கிறது விசாரித்த நீதிபதியே மாற்றி விட்டு இவர்களுக்கு தோதான நீதிபதியை அமர வைத்து அவர் மூலமாக இந்த இரண்டு ஆண்டு சிறை தண்டனையை வழங்கி வைத்திருக்கிறார்கள். இதில் திட்டமிட்ட அரசியல் சதி இருக்கிறது.எதிர்கட்சிகளே இல்லை என்ற நிலையை ஏற்படுத்த வேண்டும்.. எதிர்க்கட்சிகள் இல்லாமல் தேர்தலை சந்திக்க வேண்டும் என்ற திட்டத்தோடு பாஜக செயல்படுகிறது.

பத்தாண்டு காலத்தில் அவர் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளில் ஒன்றையும் நிறைவேற்றவில்லை. சாதியின் பெயரால் மதத்தின் பெயரால் வெறுப்பை விதைத்தார்கள். பொருளாதாரத்தை மோசமான அளவு சரிய வைத்திருக்கிறார்கள். அதானி என்கின்ற ஒருவரை உலக பணக்காரராக ஆக்குவதற்கு மோடி தன்னுடைய அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியிருக்கிறார். இந்நிலையில் தேர்தலை எதிர்கொள்வதற்காக அஞ்சுகிற பாஜக எதிர்க்கட்சிகளின் ஒற்றுமைகளை சிதைக்க வேண்டும்.

காங்கிரசை மேலும் பலவீனப்படுத்த வேண்டும் என்கிற கணக்குகளோடு இந்த நடவடிக்கைகளை மேற்கொண்டு இருப்பதாக கருதுகிறோம். இதை மிக வன்மையாக விடுதலை சிறுத்தைகள் கட்சி கண்டிக்கிறது. இது எதேச்சை அதிகாரத்தின் உச்சம். பாஜகவை மக்கள் புரிந்து கொள்வார்கள். தேர்தல் காலத்தில் உரிய பாடத்தை புகழ்த்துவார்கள்.

நீதித்துறையில் அவர்கள் எல்லா காலகட்டத்திலும் தலையிட்டு இருக்கிறார்கள்.ஒவ்வொரு பிரச்சனையிலும் நீதித்துறையில் தலையிடுகிறார்கள். இது உள்ளங்கை நெல்லிக்கனி போல தெரிகிறது.யூகமில்லை, அவர்கள் எதையும் செய்ய தயார் என்ற நிலையில் தான் இருக்கிறார்கள். எந்த அரசியல் அறத்தையும் அவர்கள் பின்பற்ற தயாராக இல்லை என தெரிவித்தார்.