திருவள்ளூர் மாவட்டத்தில் ஏடிஜிபி மற்றும் வடக்கு மண்டல ஐஜி ஆகியோர் அதிரடி ஆய்வு :

பதிவு:2023-03-26 22:27:29



திருவள்ளூர் மாவட்டத்தில் ஏடிஜிபி மற்றும் வடக்கு மண்டல ஐஜி ஆகியோர் அதிரடி ஆய்வு :

திருவள்ளூர் மாவட்டத்தில் ஏடிஜிபி மற்றும் வடக்கு மண்டல ஐஜி ஆகியோர் அதிரடி ஆய்வு :

திருவள்ளூர் மார்ச் 25 : திருவள்ளூரில் ஏடிஜிபி சங்கர், வடக்கு மண்டல ஐஜி, காஞ்சி சரக டிஐஜி பகலவன் ஆகியோர் திருவள்ளூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவில் ஆய்வு மேற்கொண்டனர். திருவள்ளூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இந்த ஆய்வு சுமார் 2 மணி நேரம் நடைபெற்றது.இந்த ஆய்வின் போது குற்றச் சம்பவங்கள் எதுவும் நடைபெறாத வகையில் இரவில் ரோந்து பணியில் இருக்கும் காவலர்கள் முறையாக பணி செய்கிறார்களா என ஆய்வு செய்தனர்.

அப்போது இரவு முழுவதும் விழித்திருந்து பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் காவலர்களுக்கு அறிவுரை வழங்கினர்.அதனைத் தொடர்ந்து திருவள்ளூர் தாலுக்கா காவல் நிலையத்தில் ஆய்வு செய்தனர். அப்போது காவல் நிலையத்தில் புகார்கள் மீதான விசாரணை மற்றும் நிலுவையில் உள்ள மனுக்கள் பற்றி கேட்டறிந்தார். மேலும் நிலுவையிலுள்ள மனுக்களை உடனடியாக தீர்வு காண உத்தரவிட்டார்.இந்த ஆய்வின் போது திருவள்ளூர் எஸ்பி பா.சிபாஸ் கல்யாண், ஏஎஸ்பி விவேகானந்தா சுக்லா மற்றும் காவல் துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.