பதிவு:2023-03-30 09:33:49
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கூட்டரங்கத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பாக விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம்
திருவள்ளூர் மார்ச் 30 : திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கூட்டரங்கத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பாக விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தலைமை தாங்கினார்.
இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் 2021-2022-ம் ஆண்டு கலைஞர் திட்ட கிராமங்களில் வங்கிகள் துறை மூலம் மூன்று கட்டங்களில் நடத்தப்பட்ட “சிறப்பு வங்கி மேளாவில்” பெறப்பட்ட விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்பட்டு தகுதியான 22 பயனாளிகளுக்கு கிசான் கிரெடிட் கார்டு திட்டத்தின் கீழ் பயிர் சாகுபடி மற்றும் பண்ணை பராமரிப்புக்கடன் ரூ.1,60,000 க்கும், பாரத பிரதமரின் உணவு பதப்படுத்தும் சிறு நிறுவனங்களை மேம்படுத்தும் திட்டத்தின் கீழ் மாவுமில் துவங்க ரூ.5,50,000ம், விவசாய நடுத்தரகால கடனாக கறவை மாடு வளர்ப்பிற்கு ரூ.2,56,000க்கும், பண்ணை சாகுபடிக்கு ரூ.2,00,000ம், பிரதம மந்திரி வேலைவாய்ப்புக்கடனாக ரூ.2,60,000 ம் சுயஉதவிக்குழுக்களுக்கு சுயதொழில் கடனாக ரூ.98,50,000ம், சாமியானா வாங்குவதற்கான தாட்கோ கடன் ரூ.7,12,000ம், பி.டெக்(தொழில்நுட்பம்) பயில கல்விக்கடன் ரூ.6,80,000ம், ஆக மொத்தம் ரூ.1,36,58,000 தொகையில் 22 பயனாளிகளுக்கும், திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலையின் மூலம் 3 பயனாளிகளுக்கு கரும்பு கிரையத் தொகை ரூ.1,69,786ம் ஆக மொத்தம் ரூ1,38,27,786 தொகையில் கடனுதவிகளை வழங்கினார்.
மாவட்ட ஆட்சியர் அவர்கள் ஆவடி புத்தக திருவிழாவில் விவசாயிகள் மற்றும் விவசாய சங்கங்கள் அதிக அளவில் புத்தகங்களை வாங்கி பயன்பெற்றதற்கும் விழாவினை சிறப்பித்தமைக்கும் நன்றியினை தெரிவித்தார். மேலும் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்ட கிராமங்களில் நடத்தப்பட்ட சிறப்பு வங்கி மேலாளவில் பெறப்பட்ட விண்ணப்பங்களை உடனடியாக பரிசீலனை செய்து பயனாளிகளுக்கு கடன் உதவி வழங்கிய வங்கி மேலாளர்களை கௌரவித்தார்.
திருவூர் வேளாண் அறிவியல் நிலையம் மற்றும் நெல் ஆராய்ச்சி நிலைய விஞ்ஞானிகள்; “வேளாண் சாகுபடியில் வண்டல் மண் பயன்பாடுகள் மற்றும் கோடை உழவு சாகுபடி முறைகள்” வேளாண் பண்ணை இயந்திரங்கள் குறித்த காணொளி காட்சி கூட்டுறவுத்துறை திருவள்ளூர் “e- NAM செயலி மற்றும் Farm Gate விற்பனை” திரு சேரலாதன் செயலாளர் ஓழங்கு முறை விற்பனைக்கூடம் திருவள்ளுர் செறிவூட்டப்பட்ட அரிசி பயன்பாடு ஒரு கண்ணோட்டம் காணொளி காட்சி மண்டல மேலாளர் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் திருவள்ளுர் விவசாயிகளுக்கு காணொளி காட்சி மூலம் விளக்கப்பட்டது.தொடர்ந்து விவசாயிகளிடமிருந்து 145 மனுக்கள் பெறப்பட்டு, சம்பந்தப்பட்ட அலுவலரிடம் உரிய நடவடிக்கை மேற்கொள்ள மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தினார்.
இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் அசோகன், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி),மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலர் செ.ஆ.ரிஷப்,வேளாண்மை இணை இயக்குனர் சுரேஷ், மாவட்ட ஆட்சியர் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) எபினேஷன், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் சண்முகவள்ளி, தமிழ்நாடு நுகர் பொருள் வாணிபக் கழக மண்டல மேலாளர் சேகர், விவசாயிகள், பொதுமக்கள் மற்றும் பல்வேறு துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.