திருவள்ளூர் அடுத்த திருப்பாச்சூரில் பிரிந்து வாழ்ந்த கணவருடன் சேர்த்து வைப்பதாக கூறி 20 வயது இளம்பெண்ணை கர்ப்பமாக்கிய 70 வயது திமுக கிளை பிரதிநிதி கைது :

பதிவு:2023-04-01 23:13:18

திருவள்ளூர் ஏப் 01 : திருவள்ளூர் மாவட்டம் பூண்டி ஒன்றியம் திருப்பாச்சூர் ஊராட்சியில் கோட்டை காலனி பகுதியில் வசித்து வருபவர் இருதயராஜ். அவரது மகள் சத்தியா(20). ஏழாம் வகுப்பு வரை படித்த ஆடு மாடு மேய்க்கும் இவர் திருமணமாகி ஆறு மாதத்தில் கணவரை பிரிந்து தந்தை வீட்டில் வசித்து வந்தார். இந்நிலையில் அதே பகுதியில் வசிக்கும் திமுக கிளை பிரதிநிதி கிருஷ்ணன் (70) என்பவர் கணவருடன் உன்னை சேர்த்து வைக்க முயற்சி செய்கிறேன் என கூறி இளம் பெண்ணிடம் பழகி உள்ளார்.

இதனைத் தொடர்ந்து கணவருடன் உன்னை சேர்த்து வைக்க வேண்டுமானால் என் ஆசைக்கு இணங்க வேண்டுமென மிரட்டி இளம் பெண் சத்யாவை பாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கியுள்ளார். இந்த நிலையில் 8 மாதத்தில் குறை பிரசவமாக கடந்த திங்கட்கிழமை வீட்டிலேயே பெண் குழந்தை பிறந்து இறந்துள்ளது.இதுகுறித்து வெளியே சொன்னால் குடும்பத்தோடு கொலை செய்து விடுவேன் என்று மிரட்டி அந்தப் பெண் வீட்டின் அருகே இறந்த குழந்தையை புதைக்க வைத்துள்ளார்.

முதியவர் கிருஷ்ணன். ஆடு மாடு மேய்க்கும் தொழில் செய்து பிழைப்பு நடத்தி வரும் இருதயராஜ் செய்வதறியாது தவித்தார். இதனையடுத்து மகளுக்கு ஏற்பட்ட இந்த சம்பவம் குறித்து அக்கம் பக்கத்தில் வசிப்பவர்கள் துணையுடன் திருவள்ளூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் கிருஷ்ணனை கைது செய்த அனைத்து மகளிர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து இளம் பெண்ணை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்திற்காக நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். 70 வயது முதியவர் திமுக கிளைச் செயலாளர் கிருஷ்ணன் என்பவர் 20 வயது பெண்ணை கர்ப்பமாக்கிய சம்பவம் இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.