அரும்பாக்கம் கிராமத்தில் கிறிஸ்துவர்கள் குருத்தோலைகளை கையில் ஏந்தி தடை செய்யப்பட்ட பகுதிக்குள் போலீசார் தடுப்பையும் மீறி உள்ளே செல்ல முயன்றதால் போலீசாருக்கும் பொதுமக்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு

பதிவு:2023-04-04 11:45:02

திருவள்ளூர் ஏப் 03 : திருவள்ளூர் மாவட்டம் பூண்டி ஒன்றியத்திற்குட்பட்ட அரும்பாக்கம் கிராமத்தில் உள்ள மலை குன்றில் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக கிறிஸ்தவர்கள் வழிபாடு நடத்தி வருகின்றனர்.கடந்த 2014-ல் 33 அடி சிலுவை அமைத்தும், 100 அடி கொடி கம்பம் அமைத்தும் வழிபாடு செய்து வருகின்றனர். இந்த தேவாயத்திற்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வந்து செல்கின்றனர்.

இந்நிலையில் தேவாலயம் கட்டப்பட்ட இடம் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான இடம் எனக்கூறி நில அளவை செய்து வருவதாகவும், ஒரு சில நாட்கள் வழிபாடு செய்வதை நிறுத்த வேண்டும் எனவும் கடந்த 17-ந் தேதி பென்னாலூர்பேட்டை போலீஸிடம் புகார் அளித்ததை தொடர்ந்து,18-ந் தேதி தேவாலயத்திற்கு செல்லும் வழியில் இது பொதுப்பணித்துறைக்கு சொந்தமான இடம் என அறிவிப்பு பலகை வைத்தனர். இந்த ஆண்டு ஈஸ்டர் பெருவிழாவை முன்னிட்டு குருத்து ஞாயிறு தினமான அசம்பாவிதங்களை தடுக்கும் பொருட்டு 100க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு கிராமம் முழுவதும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

மேலும் கிராமத்தை சுற்றிலும் வெளி ஆட்கள் உள்ளே வராத அளவிற்கு போலீசார் குவிக்கப்பட்டு வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் அரும்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட கிறிஸ்துவர்கள் தங்கள் கிராமத்தில் குருத்தோலைகளை கையில் ஏந்தி கொண்டு வீதி வீதியாக வந்து தடை செய்யப்பட்ட பகுதிக்குள் போலீசார் தடுப்பையும் மீறி உள்ளே செல்ல முயன்றதால் போலீசாருக்கும் பொதுமக்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்து திருவள்ளூர் வட்டாட்சியர் மதியழகன் கிறிஸ்தவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானப்படுத்தியதை அடுத்து அவர்கள் திரும்பி சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.