14 ஊராட்சி ஒன்றியங்களில் தற்காலிக அடிப்படையில் தொழில்நுட்ப உதவியாளர் பணியிடங்களுக்கான நேர்காணல் : மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தகவல்

பதிவு:2023-04-04 11:46:32

திருவள்ளூர் ஏப் 03 : திருவள்ளூர் மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறைக்கு உட்பட்ட 14 ஊராட்சி ஒன்றியங்களில் தற்காலிக அடிப்படையில் தொழில்நுட்ப உதவியாளர் பணியிடங்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு, வெளிச்சந்தை முறையில் (Outsourcing) Community Livelihood Centre மூலமாக அதிகபட்சம் 6 மாத காலத்திற்கு பணியில் ஈடுபடுத்த உள்ளது.

அமைப்பியல் துறையில் பட்டப்படிப்பு (பி.இ) மற்றும் பட்டயப்படிப்பு (டிப்ளமோ) முடித்து குறைந்தது மூன்று ஆண்டுகள் அனுபவம் உள்ளவர்கள் தொழில்நுட்ப உதவியாளர் பணிக்கு 05.04.2023 அன்று 11.00 மணிக்கு வெளிச் சந்தை மூலம் நடைபெறும் நேர்காணலில் சான்றுகளுடன் கலந்து கொள்ள வேண்டும்.

ஊதியம் மற்றும் ஊக்கத்தொகை சேர்த்து அதிகபட்சம் ரூ.30,000 வரை சம்பளம் வழங்கப்படும்.நேர்காணலுக்கு கல்விச்சான்று (SSLC/HSC/D.C.E/B.E / B.Tech (CIVIL)), பள்ளி மாற்றுச் சான்று,இருப்பிடச்சான்று (குடும்ப அட்டை,ஆதார் அட்டை,வாக்காளர் அடையாள அட்டை),பணிமுன் அனுபவச்சான்று (3 ஆண்டுகள்), கணிணி கல்வித்தகுதி,ஓட்டுநர் உரிமம்

நேர்காணல் திருவள்ளூர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகம்,மாவட்ட ஆட்சியரக வளாகம், தொலைப்பேசி எண்.04427663808 என்ற முகவரியில் நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.