பதிவு:2022-04-26 13:57:32
திருவள்ளூரில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி சார்பில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி :
திருவள்ளூர் ஏப் 26: திருவள்ளூரில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் முன்னாள் மாவட்ட தலைவர் காயல் அஹமது சாலிக் முதலாம் ஆண்டு நினைவேந்தல், ஏழை எளியோருக்கு நல உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி மற்றும் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி உள்ளிட்ட முப்பெரும் விழா நடைபெற்றது.இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மாவட்ட தலைவர் யாசின் மௌலானா தலைமை தாங்கினார்.மாவட்ட செயலாளர் ரஹ்மத்துல்லாஹ் மாவட்ட துணைத்தலைவர் ரஹ்மான உசேர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் சிறப்பு அழைப்பாளர்களாக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் முஹம்மது அபூபக்கர் மற்றும் தமிழக பால்வளத்துறை அமைச்சர் ஆவடி சா.மு நாசர் ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்.
இஸ்லாம் என்னும் மார்க்கம் எளிமையான மார்க்கம் எப்போதும் சகோதரத்துவத்தையும் சமத்துவத்தையும் கடைபிடிக்கும் மார்க்கமாகும். இதுபோன்ற நிகழ்ச்சியில் பங்கேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன் என்றார்.
அதனைத் தொடர்ந்து மாநில பொதுச் செயலாளர் முகமது அபுபக்கர் பேசும்போது இஸ்லாம் மார்க்கத்தில் இது போன்ற நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு சமத்துவத்தை மேலோங்கச் செய்கிறது தற்போது தமிழகத்தில் திமுக தலைவர் மு க ஸ்டாலின் தலைமையில் சிறப்பான நல்லாட்சி நடைபெறுகிறது.இந்த ஆட்சி தமிழகத்தில் நீடித்து நிலைக்க வேண்டும் மேலும் 2024 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் அனைத்து மாநிலங்களையும் ஒருங்கிணைத்து திமுக வழிநடத்தி வெற்றி காண வேண்டும் என்றார். பின்னர் ஏழை எளியோருக்கு நல உதவிகள் வழங்கப்பட்டன.
இதில் ஜமாத்துல் உலமா சபை மாவட்ட செயலாளர் உமர் பாரூக் பன்வாரி,திமுக மாவட்ட பொருளாளர் பூபதி,திருவள்ளூர் தொகுதி எம்.எல்.ஏ.வி ஜி ராஜேந்திரன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் மு.வா சித்தார்த்தன் மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நிர்வாகிகள் காயல் மகபூப் சல்மான், முகமது இப்ராஹிம் மக்கி, புளியங்குடி அமீன்,மாவட்ட பொருளாளர் பாபு சாஹிப் திருவள்ளூர் நகர்மன்ற தலைவர் உதயமலர் பொன் பாண்டியன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட துணை செயலாளர் முகமது காசிம் நன்றி கூறினார்.