பதிவு:2023-04-04 11:48:51
திருத்தணி அடுத்த கனகம்மா சத்திரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஒன்பது மணி ஆகியும் கேட் திறக்காததால் மாணவர்கள் முக்கிய சாலையில் விளையாடி வருவதால் ஆபத்து ஏற்படும் அபாயம்
திருவள்ளூர் ஏப் 04 : திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அடுத்த கனக்காமாசத்திரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் 50 க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்நிலையில் இன்று திங்கட்கிழமை 9 மணி ஆகியும் பள்ளி கேட் திறக்காமல் மூடி இருப்பதால் கேட்டுக்கு முன்பாக பள்ளி மாணவர்கள் காத்திருப்பதோடு பள்ளி சென்னை திருப்பதி நெடுஞ்சாலையை ஒட்டி இருப்பதால் மாணவர்கள் சாலையில் விளையாடி வருகின்றனர்.
போக்குவரத்து அதிகம் உள்ள சாலை என்பதால் விபத்துக்கள் ஏற்படும் அபாயம் இருப்பதாக கூறப்படுகிறது. இது குறித்து தலைமை ஆசிரியரிடம் கேட்ட போது பள்ளி மாணவர்களே பள்ளியை திறந்து வருவார்கள் என அலட்சியமாக பதில் சொல்வதாக மற்ற மாணவர்கள் தெரிவிக்கின்றனர்.
மாணவர்கள் பள்ளிக்கு வரும்போது நேராக வகுப்பறைக்கு செல்ல வேண்டிய சூழ்நிலையில் ஏர் திறக்காமல் பள்ளிக்கு வெளியே காத்திருப்பதோடு ஆபத்தான முறையில் சாலைகள் விளையாடி வருவது பொது மக்களுடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க அப்பகுதி மக்கள் கோரிக்கை எடுத்துள்ளனர்.