திருத்தணி அருகே விவசாய நிலத்தில் காட்டு பன்றிகளுக்கு வைத்த மின் வேலியில் சிக்கி மனைவி உயிரிழந்த மன வேதனையில் விவசாயி தூக்கிட்டு தற்கொலை :

பதிவு:2023-04-08 16:19:57

திருவள்ளூர் ஏப் 08 : திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அடுத்த பொம்மராஜி பேட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் மேகநாதன். விவசாயியான இவருக்கு சொந்தமான நிலத்தில் பயிர்களை காட்டு பன்றிகள் நாசப்படுத்துவதை தடுக்க மின்வேலி அமைத்திருந்தார். இந்த நிலையில் வயலுக்கு தண்ணீர் பாய்ச்ச சென்ற அவரது மனைவி துளசி மின் வேலியில் சிக்கி இறந்தார்‌.

மனைவி இறந்த கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்த கணவன் மன வேதனையில் வீட்டிற்கு சென்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து பொதட்டூர்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.