திருவள்ளூரில் ரூ.4 கோடி மதிப்புள்ள சொத்தை அபகரித்ததாக மகன்கள் மற்றும் தன் மீது தவறான புகார் கொடுத்த கணவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பெண் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை :

பதிவு:2022-04-26 14:01:00

திருவள்ளூர் ஏப் 26: திருவள்ளூர் நகராட்சிக்குட்பட்ட ஜெ.என் சாலையில் வசித்து வருபவர் ராணி. இவரது கணவர் லட்சுமணன். இவர்களுக்கு சீனிவாசன் ராஜகணபதி என்ற 2 மகன்கள் உள்ளனர்.

இந்நிலையில் கடந்த வாரம் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் ரூ.4 கோடி மதிப்புள்ள சொத்தை ஏமாற்றி கையெழுத்து வாங்கி மோசடி செய்ததாக தனது கணவர் லட்சுமணன் ஆட்சியரிடம் பொய்யான புகார் அளித்துள்ளார். பூர்வீக சொத்தை முறைப்படி தனது மகன்கள் பத்திரப்பதிவு செய்து அந்த சொத்துக்கான பணத்தை அவரிடம் கொடுத்து விட்டதாக கூறப்படுகிறது.

தவறான வழியில் அந்த பணத்தை செலவழித்து விட்டு தற்போது தன் மீதும் தன்னுடைய மகன்கள் மீதும் வீண் பழி சுமத்துவதாகவும் இதனால் தானும் தனது மகன்களும் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி இருப்பதால் பொய்யான புகார் கொடுத்த தனது கணவர் லட்சுமணனை விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கடந்த வாரம் பொய் புகார் அளித்த லட்சுமணன் என்பவரின் மனைவி மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளார்.

மேலும் தன்னை வீட்டை விட்டு துரத்தியதால் தற்போது தனது மகன்களோடு வசித்து வருவதாகவும், பொய்யான புகாரில் மன உளைச்சலுக்கு ஆளாக்கிய கணவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அந்தப் பெண் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீசிடம் கோரிக்கை விடுத்தார்.