பதிவு:2023-04-08 16:23:01
திருவள்ளூர் மேற்கு மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் சமூகநீதி பேரவைக்கு புதிய மாவட்ட பொறுப்பாளர்களுக்கு சான்றிதழ்கள் : சமூகநீதி பேரவையின் மாநில தலைவர் வழக்கறிஞர் க.பாலு வழங்கினார் :
திருவள்ளூர் ஏப் 08 : திருவள்ளூர் மேற்கு மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் தமிழின போராளி மருத்துவர் அய்யா மற்றும் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்களின் ஆலோசனைபடி திருவள்ளூர், திருத்தணி,பள்ளிப்பட்டு ஆகிய நீதிமன்றங்களின் சமூகநீதி பேரவைக்கு புதிய மாவட்ட பொறுப்பாளர்களை தேர்வு செய்து நியமனம் செய்யும் ஆலோசனை கூட்டம் மணவாளநகரில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.மேற்கு மாவட்ட செயலாளர் இ.தினேஷ்குமார் தலைமை தாங்கினார்.
கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக சமூகநீதி பேரவையின் மாநில தலைவர் வழக்கறிஞர் க.பாலு கலந்து கொண்டு சமூகநீதி பேரவைக்கு புதிய மாவட்ட பொறுப்பாளர்களை தேர்வு செய்து அதற்கான நியமன சான்றிதழ்களை வழங்கினார். இதில் சமூகநீதி பேரவையின் மண்டல செயலாளர் வழக்கறிஞர் கே.சரவணன், ஐ.டி.விங்கு மாநில செயலாளர் கஜேந்திரன், ஒன்றிய கவுன்சிலர் நா.வெங்கடேசன், வன்னிய சங்க மாவட்ட செயலாளர் பூபதி, மாவட்ட துணை செயலாளர் யோகநாதன் உட்பட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.