திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் கிறிஸ்தவ தேவாலயங்களில் புனித வெள்ளி சிறப்பு வழிபாடு :

பதிவு:2023-04-08 16:28:22



திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் கிறிஸ்தவ தேவாலயங்களில் புனித வெள்ளி சிறப்பு வழிபாடு :

திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் கிறிஸ்தவ தேவாலயங்களில் புனித வெள்ளி சிறப்பு வழிபாடு :

திருவள்ளூர் ஏப் 08 : புனித வெள்ளி தினத்தை திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள சி எஸ் ஐ , வெற்றி சிலுவை ஆலயம், கௌடி ஆலயம், அற்புத ஜெப கோபுரம், ஏ.ஜி தேவாலயம், டி இ.எல் சி. உள்பட ,அனைத்து தேவாலயங்களிலும் சிறப்பு பிரார்த்தனை மற்றும் சிலுவைப்பாடு நிகழ்ச்சி நடைபெற்றது.

கிறிஸ்தவ மக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான ஈஸ்டர் பண்டிகை கடந்த பிப்ரவரி மாதம் சாம்பல் புதனுடன் தொடங்கியது. இதிலிருந்து 42 நாட்கள் கிறிஸ்தவ மக்கள் தவக்காலத்தை கடைபிடிக்கின்றனர். ஈஸ்டர் பண்டிகைக்கு முந்தைய வாரம் குருத்தோலை ஞாயிறாக கடைபிடிக்கப்படுகிறது. அன்றைய தினம் கிறிஸ்தவ மக்கள் குருத்தோலைகளை கையில் ஏந்தி பவனியாக சென்று தேவாலயங்களில் வழிபடுவது வழக்கம். இதன்படி கடந்த ஏப்ரல் 2-ஆம் தேதி குருத்தோலை ஞாயிறு கடைபிடிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து நேற்று புனித வெள்ளி கடைபிடிக்கப்பட்டது. திருவள்ளூர் மாவட்டத்தில் திருத்தணி,கும்மிடிப்பூண்டி, பொன்னேரி, பெரியபாளையம், புட்லூர், கடம்பத்தூர், பேரம்பாக்கம், ஊத்துக்கோட்டை, பூண்டி, உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் புனிதவெள்ளி கடைபிடிக்கப்பட்டது.

இதில் சிலுவையில் இயேசு நாதர் அறையப்பட்ட போது அவர் பேசிய 7 வார்த்தைகளை கிறிஸ்தவர்கள் தியானம் செய்தனர். மேலும், அனைத்து தேவாலயங்களிலும் சிறப்பு பிரார்த்தனைகள் மற்றும் திருப்பலிகள் நடைபெற்றது.மேலும், பல்வேறு இடங்களில் இயேசுபிரான் மரணத்தை நினைவுபடுத்தும் சிலுவைப்பாடு நிகழ்ச்சி நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து வரும் 9-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்படவுள்ளது.