பதிவு:2023-04-08 16:31:51
திருவள்ளூர் வீரராகவர் கோவிலில் திருவூரல் மஹோத்சவம் : புட்லூருக்கு உற்சவர் புறப்பாடு :
திருவள்ளூர் ஏப் 08 : திருவள்ளூரில் உள்ள பிரசித்தி பெற்ற வீரராகவப் பெருமாள் கோவில் 108 திவ்ய தேசங்களில் ஒன்றாக உள்ளது.இந்த கோவிலில் ஆண்டு தோறும் உற்சவர் வீரராகவர் பெருமாள் புட்லூர் கிராமத்திற்கு விஜயம் செய்வது வழக்கம். இது திருவூரல் மகோற்சவம் என்று அழைக்கப்படுகிறது.
இந்த ஆண்டுக்கான திருவூரல் மஹோத்சவம் இன்று நடைபெற்றது.இதையொட்டி உற்சவர் வீரராகவர் பெருமாள் கோவிலில் இருந்து நேற்று அதிகாலை 5 மணிக்கு புட்லூர் கிராமத்திற்கு புறப்பட்டார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.அங்கு மதியம் 1 மணிக்கு சுவாமிக்கு திருமஞ்சனம் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதைத்தொடர்ந்து நேற்று இரவு 9.30 மணிக்கு புட்லூர் கிராமத்தில்சுவாமி திருவீதி புறப்பாடு நடைபெற்றது. அப்போது, வழிநெடுகிலும் உள்ள பக்தர்களுக்கு, பெருமாள் காட்சியளித்து, அருள்பாலித்தார். இதனைத் தொடர்ந்து இன்று அதிகாலை 2 மணிக்கு புட்லூரில் இருந்து வீரராகவ பெருமாள் திருவள்ளூர் கோவிலுக்கு திரும்பினார். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் மற்றும் விழாக்குழுவினர் செய்திருந்தனர்.