திருவள்ளூர் மாவட்ட சமரச மையம் சார்பில் சமரச தின விழிப்புணர்வு பேரணி : முதன்மை மாவட்ட நீதிபதி செல்வசுந்தரி கொடியசைத்து துவக்கி வைத்தார்

பதிவு:2023-04-11 23:14:24



திருவள்ளூர் மாவட்ட சமரச மையம் சார்பில் சமரச தின விழிப்புணர்வு பேரணி : முதன்மை மாவட்ட நீதிபதி செல்வசுந்தரி கொடியசைத்து துவக்கி வைத்தார்

திருவள்ளூர் மாவட்ட சமரச மையம் சார்பில் சமரச தின விழிப்புணர்வு பேரணி : முதன்மை மாவட்ட நீதிபதி செல்வசுந்தரி கொடியசைத்து துவக்கி வைத்தார்

திருவள்ளூர் ஏப் 11 : சென்னை உயர்நீதிமன்ற உத்தரவு மற்றும் வழிகாட்டுதலின்படி திருவள்ளூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் திருவள்ளூர் மாவட்ட சமரச மையம் சார்பில் நடைபெற்ற சமரச தின விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இந்த பேரணியை முதன்மை மாவட்ட நீதிபதியும் மாவட்ட சமரச மையங்களின் ஒருங்கிணைப்பாளருமான எஸ்.செல்வசுந்தரி தலைமை தாங்கி கொடியசைத்து துவக்கி வைத்தார்.

இந்த பேரணிக்கான ஏற்பாட்டை திருவள்ளூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயலாளரும் மாவட்ட சமரச மையத்தின் ஒருங்கிணைப்பாளரும், மூத்த உரிமையியல் நீதிபதியுமான பி.வி.சாண்டில்யன் செய்திருந்தார்.

ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் இருந்து துவங்கிய பேரணியில் சமரசம் நாடுவீர் என்ற தலைப்பில் எவ்வாறு சமரச மையம் செயல்படுகிறது, சமரச மையத்தில் எவ்வாறு வழக்குகள் எடுத்து கொள்கின்றனர், சமரச மையத்தில் வழக்காடிகள் எவ்வாறு பங்கு கொள்ளலாம் போன்ற விளக்கங்கள் கொண்ட விழிப்புணர்வு பிரசுரங்கள் பொதுமக்களிடையே விநியோகிக்கப்பட்டன. இதில் சட்ட கல்லூரி மாணவர்கள் விழிப்புணர்வு பதாகைகள் மற்றும் விழிப்புணர்வு கோஷங்களை எழுப்பி பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

இந்த நிகழ்ச்சியில் திருவள்ளூர் நிரந்தர மக்கள் நீதிமன்ற மாவட்ட நீதிபதி ரமேஷ் மோட்டார் வாகன விபத்து சிறப்பு மாவட்ட நீதிமன்ற நீதிபதி சரஸ்வதி, குடும்ப நல நீதிமன்ற நீதிபதி வித்யா, சார்பு நீதிமன்ற நீதிபதி மகேஸ்வரி , கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிமன்ற நீதிபதி, குற்றவியில் நீதிமன்ற நீதித்துறை நீதிபதி வேலரசு, மேலும் சமரச மையம் குறித்து விழிப்புணர்வு ஏற்படும் வகையிலான துண்டு பிரசுரங்களை முதன்மை மாவட்ட நீதிபதி எஸ்.செல்வசுந்தரி , மாவட்ட உரிமையியல் கூடுதல் நீதிபதி சார்லி பொது மக்களிடையே வழங்கி, விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படும் வகையில் மரக்கன்றுகளை நட்டார். இதில் அரசு வழக்கறிஞர் மூர்த்தி, வழக்கறிஞர்கள் பரிபூரணம், டி.சீனிவாசன், சுரேஷ் மற்றும் சட்டக் கல்லூரி மாணவ மாணவியர்கள், பொதுமக்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.