தச்சூர் முதல் ஆந்திர மாநிலம் சித்தூர் வரையிலான தேசிய நெடுஞ்சாலை திட்டத்திற்காக விவசாய நிலங்களை அழிக்கப்படுவதை கண்டித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் :

பதிவு:2022-04-26 14:05:06

திருவள்ளூர் ஏப் 26 : திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அடுத்த தச்சூர் முதல் சித்தூர் வரை 116 கிலோ மீட்டர் தூரத்திற்கு 6 வழிச்சாலைஅமைக்க விவசாய நிலங்களை கையகப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.இதில் திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டிலிருந்து ஊத்துக்கோட்டை வரை உள்ள 350 விவசாயிகளிடமிருந்து 1300 ஏக்கர் நிலங்களை அரசு கையகப்படுத்திடும் நிலையில் தேசிய நெடுஞ்சாலை திட்டத்திற்கு நிலம் தரும் விவசாயிகளுக்கு சட்டப்படி இழப்பீடு வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி 300-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கடந்த சில தினங்களுக்கு முன்பு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

அப்போது விவசாயிகளிடமிருந்து கையகப்படுத்திய நிலத்திற்கு எவ்வளவு தொகை வழங்கப்போகிறோம் என்பதை சொல்லாமல் அவர்களை மிரட்டுவது மற்றும் பத்திரங்களை மிரட்டி வாங்கி வைத்துக் கொள்வது போன்ற செயல்களில் ஈடுபடும் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்திருந்தனர்.

ஆனால் மாவட்ட நிர்வாகம் சார்பில் விவசாயிகளுக்கு ஆதரவாக எந்த நடவடிக்கையும் எடுக்காததால் ஆத்திரமடைந்த திருவள்ளூர் மாவட்ட விவசாயிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் நேதாஜி சாலையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சிறு குறு விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காக்கும் விவசாய நிலங்களை கையகப்படுத்துவதை கைவிட்டு மாற்றுப்பாதையில் சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இல்லையேல் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் மிகப் பெரிய போராட்டத்தில் ஈடுபடப் போவதாகவும் எச்சரித்தனர்.