பதிவு:2023-04-11 23:19:06
தொழுதாவூரில் கிணற்றி்ல் குளிக்க குதித்த போது நீரில் மூழ்கி பலியான பெயிண்ட்டர் : 4 நேர போராட்டத்திற்கு பின் உடலை தீயணைப்பு வீரர்கள் மீட்டனர் :
திருவள்ளூர் ஏப் 11 : திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு அடுத்த தொழுதாவூர் கிராமத்தைச் சேர்ந்தவர் திலீப். பெயிண்ட்டரா இவர் தொழுதாவூரில் சுண்ணாம்பு அடிக்கும் வேலைக்கு சென்றவர் மாலை 4 மணியளவில் தொழுதாவூரில் உள்ள விவசாயி மணி என்பவரது கிணற்றில் குளிப்பதற்காக திலீப் மற்றும் அவரது நண்பர்கள் 5 பேர் வந்துள்ளனர்.
அப்போது திலீப் கிணற்றில் குதிக்கும் போது நீரில் மூழ்கினார். இது குறித்து திருவாலங்காடு போலீசாருக்கு கொடுத்த தகவலின் பேரில், பேரம்பாக்கம் தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து தேடும் பணியில் ஈடுபட்டனர். 3 மணி நேர தேடுதலுக்குப் பிறகு நீரில் மூழ்கி கிடந்த திலீப்பின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் இவருக்கு சரண்யா என்ற பெண்ணுடன் திருமணமாகி 10 ஆண்டுகள் ஆகி, குழந்தை இல்லாத நிலையில், கடந்த ஓராண்டாக ஸ்ரீபெரும்புதூரில் உள்ள மாமியார் வீட்டில் இருந்தவர் இன்று தான் தொழுதாவூர் கிராமத்திற்கு வந்ததும், முதல் நாள் சுண்ணாம்பு அடிக்கும் வேலைக்கு சென்றவர் குளிப்பதற்காக கிணற்றில் குதித்த போது நீரில் மூழ்கி பலியானதும் தெரியவந்தது. உயிரிழந்த திலீப்பின் மனைவி சரண்யாக தற்போது 5 மாத கர்ப்பிணியாக இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவம் அந்த கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.