திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் மணிமேகலை விருது பெற விண்ணப்பிக்கலாம் : ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தகவல் :

பதிவு:2023-04-14 18:10:09



திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் மணிமேகலை விருது பெற விண்ணப்பிக்கலாம் : ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தகவல் :

திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் மணிமேகலை விருது பெற விண்ணப்பிக்கலாம் :  ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தகவல் :

திருவள்ளூர் ஏப் 14 : திருவள்ளூர் மாவட்டத்தில் 2022-2023ம் ஆண்டிற்கான தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்புற வாழ்வாதார இயக்கத்தின் மூலம் வழங்கப்படும் மணிமேகலை விருதிற்கான தகுதியுடைய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அமைச்சர் அவர்கள் மாநிலம் மற்றும் மாவட்ட அளவில் சிறப்பாக செயல்படும் கிராம ஊராட்சி பகுதிகளிலுள்ள மகளிர் சுய உதவிக் குழுக்கள், ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, வட்டார அளவிலான கூட்டமைப்பு, கிராம வறுமை ஒழிப்புச் சங்கங்கள் மற்றும் நகர்ப்புறங்களில் உள்ள மகளிர் சுய உதவிக் குழுக்கள், பகுதி அளவிலான கூட்டமைப்பு, நகர அளவிலான கூட்டமைப்பு ஆகிய சமுதாய அமைப்புகளுக்கு மணிமேகலை விருது வழங்குவதற்கான அறிவிப்பில் அரசாணை (நிலை) எண். 133-ன் படி ரூ.2.10 கோடி ஒதுக்கீடு செய்து வெளியிட்டுள்ளார்.

திருவள்ளூர் மாவட்டத்தில் சிறப்பாக செயல்படும் 3 மகளிர் சுய உதவிக் குழுக்கள்,1 ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, 1 வட்டார அளவிலான கூட்டமைப்பு, 1 கிராம வறுமை ஒழிப்பு சங்கங்கள் மற்றும் நகர்ப்புறங்களில் உள்ள 3 மகளிர் சுய உதவிக் குழுக்கள், 1 பகுதி அளவிலான கூட்டமைப்பு, நகர அளவிலான கூட்டமைப்பு ஆகியவை விருதிற்காக தேர்வு செய்வதற்கான விரிவான வழிகாட்டு நெறிமுறைகள் இவ்வரசாணையில் வழங்கப்பட்டுள்ளது.

இவ்விருதினை பெற சமுதாய அமைப்புகளின் தொடர்ச்சியான கூட்ட நடவடிக்கைகள், நிதி பயன்பாடு மற்றும் சேமிப்பு பெருங்கடன், மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்களின் வாழ்வாதார தொழில் நடவடிக்கைகள் மற்றும் பயிற்சிகள், சமுதாயம் சார்ந்த பணிகளில் பங்கு பெறுதல் ஆகிய நடவடிக்கைகளை தொகுத்து உரிய படிவத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.

மணிமேகலை விருது பெறுவதற்கு விண்ணப்பிக்கும் தகுதியான கிராமப்புற சமுதாய அமைப்புக்கள், சம்பந்தப்பட்ட ஊராட்சி ஒன்றியத்தைச் சார்ந்த வட்டார இயக்க மேலாளரிமும், நகர்ப்புற சமுதாய அமைப்புக்கள், சம்பந்தப்பட்ட நகராட்சி பேரூராட்சி சமுதாய அமைப்பாளர்களை தொடர்பு கொண்டும், படிவங்களை பெற்று பூர்த்தி செய்து 21.04.2023 க்குள் விண்ணப்பங்களை தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு, திருவள்ளூர் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.