சென்னை தீவுத்திடலில் நடைபெறும் சாராஸ் மேளாவில் பங்கேற்க மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் வேண்டுகோள் :

பதிவு:2023-04-14 18:12:34

திருவள்ளூர் ஏப் 14 : சென்னையில் உள்ள தமிழ்நாடு மகளிர் நல மேம்பாட்டு நிறுவனம் சார்பில் 2023 -24-ம் ஆண்டு சாராஸ் மேளா வருகிற 29-ந் தேதி முதல் மே மாதம் 15-ந் தேதி வரை தீவுத்திடலில் நடத்துவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து இக்கண்காட்சியில் கலந்துக்கொள்ள விருப்பம் உள்ள மகளிர் சுய உதவிக்குழுக்குழுவினர் தங்கள் குழுக்கள் பெயர், முகவரி, உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் மற்றும் கைபேசி எண் ஆகிய விவரங்களை வரும் 17-ந் தேதி மாலை 5 மணிக்குள் திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மகளிர் திட்ட அலுவலகத்தில் உடனடியாக பதிவு செய்து கொள்ளுமாறு ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் கேட்டுக் கொண்டார்.

மேலும் https://exhibition.mathibazaar.com/login என்ற இணைய தொடரில் பதிவேற்றம் செய்யுமாறும் மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் கேட்டுக் கொண்டார். மேலும் விவரங்களுக்கு 044-27664528, 9176099966 தொடர்பு கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக் கொண்டார்.