திருவள்ளூர் அடுத்த அரும்பாக்கத்தில் அரசின் விதிமுறைகளை மீறி ஈஸ்டர் தினத்தன்று மலைக்குன்றின் மீது ஏற முயற்சித்தவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி இந்து முன்னனி கட்சியினர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் :

பதிவு:2023-04-14 18:17:28

திருவள்ளூர் ஏப் 14 : திருவள்ளூர் மாவட்டம் பூண்டி ஒன்றியம் அரும்பாக்கம் கிராமத்தில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான மலைப் பகுதியில் உள்ள தேவாலயத்தில் வழிபாடு செய்ய தடை விதிக்கப்பட்ட து. இந்நிலையில் அரும்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவரின் கணவரும் நீர்வள ஆதார துறையில் பாசன உதவியாளருமாக இருக்கக் கூடிய திமுகவைச் சேர்ந்த ரகு என்பவர் 100-க்கும் மேற்பட்ட கிறிஸ்தவர்களை ஒன்று கூட்டி கடந்த ஏப்ரல் 2-ம் தேதி ஈஸ்டர் தினத்தன்று மலைக் குன்றின் மீது ஏற முயற்சித்தார்.

இது குறித்து கிராம நிர்வாக அலுவலர் பென்னாலூர்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்த நிலையில் புகாரின் அடிப்படையில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதனையடுத்து பென்னாலூர்பேட்டை போலீசார் ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் ரகு மீது எப்ஐஆர் பதிவு செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து மாநில இந்து முன்னணி தலைவர் ரவீந்திரநாத் தலைமையில் இந்து முன்னணி மற்றும் பாரதிய ஜனதா நிர்வாகிகள் பென்னாலூர்பேட்டை காவல் நிலையத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.

இதனை அடுத்து டிஎஸ்பி கணேசன் ஆய்வாளர் சத்தியபாமா ஆகியோர் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட இந்து முன்னணி கட்சியினருடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட முயன்றனர் இதனால் போலீசாருக்கும் இந்து முன்னணி கட்சியினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனை அடுத்து இந்து முன்னணி மாநில நிர்வாகி ரவீந்திரநாத் ,மாவட்ட நிர்வாகி வினோத்கண்ணா உள்ளிட்ட இந்து முன்னணி மற்றும் பாஜக நிர்வாகிகளை போலீசார் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.