ரஷ்யா விண்வெளி மையத்திற்கு செல்ல திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த 6 அரசுப்பள்ளி மாணவ மாணவிகள் தேர்வு : மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸிடம் வாழ்த்து :

பதிவு:2023-04-14 18:22:18



ரஷ்யா விண்வெளி மையத்திற்கு செல்ல திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த 6 அரசுப்பள்ளி மாணவ மாணவிகள் தேர்வு : மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸிடம் வாழ்த்து :

ரஷ்யா விண்வெளி மையத்திற்கு செல்ல திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த 6 அரசுப்பள்ளி மாணவ மாணவிகள் தேர்வு : மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸிடம் வாழ்த்து :

திருவள்ளூர் ஏப் 14 : தமிழ்நாட்டில் அரசுப் பள்ளி மாணவர்களின் திறமைகளை வெளிக்கொணர வேண்டும் என்பதற்காகவும், அவர்களின் அறிவுத் திறனை உலகறியச் செய்ய வேண்டும் என்பதற்காகவும் ராக்கெட் சயின்ஸ் என்ற தலைப்பில் ஆன்லைன் பயிற்சி திட்டம் கடந்த ஜனவரி 2022ல் நடத்தப்பட்டது.

பிரம்மோஸ் நாயகன் விஞ்ஞானி சிவதாணுப்பிள்ளை தலைமையில் நடந்தப்பட்ட இந்த பயற்சி வகுப்பிற்கு தமிழகத்தில் உள்ள 56 அரசு பள்ளிகளைச் சேர்ந்த 500 மாணவ மாணவியர் தேர்வாகினர். தேர்வு செய்யப்பட்ட இந்த 500 மாணவர்களுக்கும் 15 வகுப்புகள் நடத்தப்பட்டது. 2022 ஏப்ரல் 2-ம் தேதி முதல் சான்றிதழ் வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து இந்த 500 மாணவர்களில்ல 220 பேர் இரண்டாம் கட்ட பயிற்சி வகுப்புக்கு தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுக்கு வார விடுமுறை நாட்களில் மாலை 5.30 மணி முதல் 7.30 மணி வரை ஆன்லைன் வகுப்பும், தொடரந்து நடத்திய வகுப்பிலிருந்து கேள்வியும் கேட்கப்பட்டு அதற்கான விடைகளை சொல்லும் விதத்தை வைத்து மாணவர்களின் அறிவுத் திறனை மேலும் கண்டறிந்தனர்.

மாணவர்களின் வருகைப் பதிவேடு, வினாடி - வினா, குறுகிய வினா விடை மூலம் 130 மாணவர்கள் 3-ம் கட்ட பயிற்சிக்கு தேர்வாகினர். இறுதியாக 50 பேர் தமிழ்நாடு அரசின் ஆதரவுடன் வரும் ஜூன் மாதம் ரஷ்யா நாட்டில் உல்ள யூரி ககாரின் விண்வெளி ஆய்வு மையத்தை பார்வையிட தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அதன்படி திருவள்ளூர் மாவட்டம் திருப்பாச்சூரில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் 9-ம் வகுப்பு பயிலும் மாணவி பி.இவாஞ்சிலின், புழலில் உள்ள பொப்பிலிராஜா மேல்நிலைப் பள்ளியில் பயிலும் 11-ம் வகுப்பி மாணவி கீர்த்திகா, அதே பள்ளியில் 11-ம் வகுப்பு பயிலும் குமரவேல், கதிர்வேடு கிராமத்தைச் சேர்ந்த அரசு மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு பயிலும் ரூபேஷ், செங்குன்றம் அரசு உயர்நிலைப்பள்ளியில் 9-ம் வகுப்பு பயிலும் ரேஷ்மா, அதே பள்ளியில் 9-ம் வகுப்பு பயிலும் ஜீவிதா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டம் திருப்பாச்சூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் தேர்வான பி.இவாஞ்சிலின் உள்ளிட்ட 6 அரசுப் பள்ளி மாணவ மாணவியர்கள் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் த.இராமன் தலைமையில் திருப்பாச்சூர் அரசு உயர் நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் தாமோதரன் மற்றும் ஆசிரியை ஜெகதீஸ்வரி, முதன்மைக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் பூபாலமுருகன் ஆகியோர் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீசை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

அப்போது, குறைந்த வயதில் இந்த சாதனையை எட்டிய நீங்கள் வருங்காலத்தில் மிகப் பெரிய விஞ்ஞானியாக தங்களை உயர்த்திக் கொள்ள பாடுபடவேண்டும் என்றும், அதற்கான எந்த உதவியும் செய்யத் தயாராக இருப்பதாகவும் மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்தார். இதனால் மாணவ மாணவிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர்.