பதிவு:2023-04-14 18:24:51
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் அவரது திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை :
திருவள்ளூர் ஏப் 14 : ஆண்டுதோறும் சட்ட மாமேதை டாக்டர்.அம்பேத்கரின் பிறந்த நாளான ஏப்ரல் 14-ம் நாளை சமத்துவ நாளாக அனுசரிப்பதை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் சட்டமாமேதை டாக்டர் அம்பேத்கரின் 133 வது பிறந்த நாளை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள அவரது திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
அதனைத் தொடர்ந்து அனைத்து துறை அரசு அலுவலர்கள் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தலைமையில் சமத்துவ நாள் உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனர்.
இதில் மாவட்ட வருவாய் அலுவலர் அசோகன், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி), மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலர் செ.ஆ.ரிஷப், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் செல்வராணி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அலுவலர் குணசேகரன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) காயத்ரி சுப்பிரமணியன், அலுவலக மேலாளர் (நீதியியல்) டி.மீனா, பழங்குடியினர் நல முன்னேற்ற சங்கப் பிரதிநிதிகள் ஜெய தென்னரசு, நீலவானத்து நிலவன், ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.தாஸ், தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு நிறுவன தலைவர் சா.அருணன், சமூக ஆர்வலர்கள், பல்வேறு சங்கப் பிரதிநிதிகள், பொதுமக்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.