திருவள்ளூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் அம்பேத்கர் பிறந்த நாளையொட்டி அவரது திருவுருவச்சிலைக்கு மலை அணிவித்து மரியாதை :

பதிவு:2023-04-14 23:41:11



திருவள்ளூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் அம்பேத்கர் பிறந்த நாளையொட்டி அவரது திருவுருவச்சிலைக்கு மலை அணிவித்து மரியாதை :

திருவள்ளூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் அம்பேத்கர் பிறந்த நாளையொட்டி அவரது திருவுருவச்சிலைக்கு மலை அணிவித்து மரியாதை :

திருவள்ளூர் ஏப் 14 : திருவள்ளூரில் திமுக சார்பில் அம்பேத்கர் பிறந்த நாளையொட்டி அவரது திருவுருவச்சிலைக்கு பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர், சட்டப்பேரவை உறுப்பினர் வி.ஜி.ராஜேந்திரன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

நாடு முழுவதும் சட்ட மேதை அம்பேத்கர் 132 ஆவது பிறந்த தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. அதோடு, இந்த நாளை சமத்துவ நாளாகவும் கடைபிடிக்கவும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன் அடிப்படையில் திமுக சார்பில் திருவள்ளூர் நகராட்சி திரு.வி.க பேருந்து நிலையம் முன்புறம் உள்ள அவரது திருவுருவச்சிலைக்கு பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செய்தனர். இதில் திருவள்ளூர் மேற்கு மாவட்ட செயலாளர் எஸ்.சந்திரன், நகராட்சி தலைவர் உதயமலர் பாண்டியன், துணைத் தலைவர் சி.சு.ரவிச்சந்திரன் உள்ளிட்ட அக்கட்சியினர் பங்கேற்றனர்.

அதேபோல் திருவள்ளூர் ஆயில் மில் பகுதியில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் ரமணா தலைமையில் நகர செயலாளர் கந்தசாமி, நகர பொருளாளர் துக்காராம், இலக்கிய அணி இணைச்செயலாளர் நாகேந்திரன், நிர்வாகிகள் வேல்முருகன், எழில், தியாகு ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

பா.ஜ.க சார்பில் மாவட்ட தலைவர் அஸ்வின், மாவட்ட பொதுச்செயலாளர் கருணாகரன், ஆர்யாசீனிவாசன், நகர தலைவர் சதீஷ், மாவட்ட மருத்துவ அணி பிரிவு லோகேஷ் பிரபு, மாவட்ட செயலாளர் ரமேஷ் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

காங்கிரஸ் சார்பில் மக்களவை உறுப்பினர் ஜெயக்குமார், மாட்ட தலைவர் ஏ.ஜி.சிதம்பரம், நகர் தலைவர் ஜான், மாநில செயலாளர் மோகனதாஸ், ஊராட்சி தலைவர் சதா பாஸ்கரன், மாநில ஓபிசி அணி பிரிவு செயலாளர் வெங்கடேசன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில நிர்வாகிகள் பாலசிங்கம், நீலவானத்து நிலவன், தளபதி சுந்தர், மு.வ.சித்தார்த்தன், இளைஞரணி அணி அமைப்பாளர்கள் விஜி, சித்தம்பாக்கம் வேதா, ஆணழகன் சீனிவாசன் உள்ளிட்டோர் காக்களூர் புறவழிச்சாலை முதல் ஆயில் மில் வரையில் ஊர்வலமாக வந்து அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்தனர்.

திருத்தணியில் அதிமுக அமைப்பு செயலாளர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான திருத்தணி கோ.அரி அம்பேத்கர் சிலைக்கு மாலை அனைத்து மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்ச்சியில் ஆவின் சேர்மேன் கவிச்சந்திரன் திருத்தணி தாலுக்கா கூட்டுறவு விற்பனை சங்க தலைவர் எம். ஜெயசேகர்பாபு முன்னாள் கவுன்சிலர் கேபிள் சுரேஷ், சி.முனுசாமி, நாகூர் பிச்சை உள்ளிட்ட பல்வேறு நிர்வாகிகள் கலந்து கொண்டனர் .இதேபோல் திருவள்ளூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பல்வேறு கட்சி மற்றும் சங்கத்தினர் அம்பேத்கர் சிலைக்கு மாலை அனைத்து மரியாதை செலுத்தினர்.