ஈக்காட்டில் திருவள்ளூர் தெற்கு ஒன்றிய அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் பா.பெஞ்சமின் நீர் மோர் பந்தலை திறந்து வைத்தார்

பதிவு:2023-04-15 16:20:56

ஈக்காட்டில் திருவள்ளூர் தெற்கு ஒன்றிய அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் பா.பெஞ்சமின் நீர் மோர் பந்தலை திறந்து வைத்தார்

ஈக்காட்டில் திருவள்ளூர் தெற்கு ஒன்றிய அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் பா.பெஞ்சமின் நீர் மோர் பந்தலை திறந்து வைத்தார்

திருவள்ளூர் ஏப் 15 : திருவள்ளூர் தெற்கு ஒன்றிய அதிமுக சார்பில் நீர்மோர் பந்தல் திறப்பு நிகழ்ச்சி ஈக்காட்டில் நடைபெற்றது.இந்த நிகழ்ச்சிக்கு ஒன்றிய செயலாளர் புட்லூர் ஆர். சந்திரசேகர் தலைமை தாங்கினார். அவைத்தலைவர் தீபா கண்ணன், மாவட்ட விவசாய பிரிவு செயலாளர் கே பி ஜெயபால், ஒன்றிய துணை செயலாளர் இளையா என்கிற மோகனசுந்தரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் முன்னாள் அமைச்சரும் திருவள்ளூர் மத்திய மாவட்ட செயலாளருமான பா.பெஞ்சமின், முன்னாள் எம்எல்ஏ, என்.எஸ்.ஏ. மணிமாறன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு நீர் மோர் பந்தலை திறந்து வைத்து பொதுமக்களுக்கு மோர் இளநீர் தர்பூசணி குளிர்பானங்கள் ஆகியவற்றை வழங்கினர்.

இதில் பூந்தமல்லி கிழக்கு ஒன்றிய செயலாளர் கே ஜி டி கௌதமன், நிர்வாகிகள் சக்தி ஜெயபால், பி சந்திரன், ஜீவா சுப்பிரமணி, எட்டியப்பன், ஜெயம் தங்கமணி, விஜயகுமார் உள்பட திருவள்ளூர் தெற்கு ஒன்றிய அதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.