திருவள்ளூர் அடுத்த வெள்ளவேட்டில் விசிக நிர்வாகி வைத்த பேனர் கிழிப்பு : நடவடிக்கை எடுக்கக் கோரி சாலை மறியல்

பதிவு:2023-04-15 16:22:48



திருவள்ளூர் அடுத்த வெள்ளவேட்டில் விசிக நிர்வாகி வைத்த பேனர் கிழிப்பு : நடவடிக்கை எடுக்கக் கோரி சாலை மறியல்

திருவள்ளூர் அடுத்த வெள்ளவேட்டில் விசிக நிர்வாகி வைத்த பேனர் கிழிப்பு : நடவடிக்கை எடுக்கக் கோரி சாலை மறியல்

திருவள்ளூர் ஏப் 15 : திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி அடுத்த வெள்ளவேடு கிராமத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட தொழிலாளர் விடுதலை முன்னணி நிர்வாகியாக இருக்கும் தட்சணாமூர்த்தி என்பவர் வசித்து வருகிறார்.இவர் அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு தனது வீட்டின் முன்பு டாக்டர் அம்பேத்கர், தொல் திருமாவளவன் ஆகியோர் அடங்கிய விளம்பர பதாகைகளை வைத்திருந்தார்.

இந்நிலையில் திருவள்ளூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தட்சிணாமூர்த்தி வீடு திரும்பிய போது வீட்டு வாசலில் வைத்திருந்த பேனர் கிழிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. இதனால் ஆத்திரமடைந்த தட்சிணாமூர்த்தி சாலை மறியலில் ஈடுபட்டார்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வெள்ளவேடு போலீசார் சமாதான பேச்சு வார்த்தை நடத்தினர். ஆனால் பேனரை கிழித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் வரை சாலை மறியல் போராட்டத்தை விட மாட்டேன் என தெரிவித்ததால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

இதனையடுத்து விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நிர்வாகிகள் ச.சேகர், அருண் கௌதம், சிவனேசன், சரவணன், ராஜசேகர், அன்பரசு, சந்தோஷ் குமார், சேட்டு, கார்த்திகேயன் கிஷோர், சிலம்பரசன், நாராயணன், அபினேஷ் ஆகியோர் தட்சிணாமூர்த்தி போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து சாலை மறியல் போராட்டத்தில் பங்கேற்றனர். இதனால் வெள்ளவேடு பகுதியில் பரபரப்பாக காணப்பட்டது.பேனர்கள் கிழித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.