திருத்தணியில் டாஸ்மாக் கடையில் பீர் மதுபானம் கிடைக்காமல் குடிமகன்கள் அவதி : கள்ளச் சந்தையில் விற்பவர்களுக்கு கூடுதல் விலைக்கு விற்பதாக குற்றச்சாட்டு :

பதிவு:2023-04-15 16:25:53

திருவள்ளூர் ஏப் 15 : திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி தாலுகாவிற்கு உட்பட்ட பொதட்டூர்பேட்டை, பள்ளிப்பட்டு , ஆர்.கே.பேட்டை, திருத்தணி, கே ஜி. கண்டிகை உள்ளிட்ட பகுதிகளில் 18 அரசு டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகிறது. தற்போது வெயில் காலம் தொடங்கி இருப்பதால் பீர் எனப்படும் மதுவை அருந்த குடிமகன்கள் விரும்புவார்கள்.

ஆனால் திருத்தணி தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளுக்கு வரும் பீர் பாட்டில்களை கிராமப்புறங்களில் கள்ள சந்தையில் விற்பனை செய்யும் நபர்களுக்கு கூடுதல் விலைக்கு விற்று விடுகின்றனர். அவர்களும் கூடுதலாக 50 ரூபாய் உயர்த்தி விற்பனை செய்து விடுகின்றனர்.

அதே நேரத்தில் ஆந்திராவில் மதுபானங்கள் விலை உயர்வாக இருப்பதால் ஆந்திர எல்லையோர பகுதிகளில் இருந்தும் பீர் பாட்டில்களை அதிகளவில் வாங்கி செல்கின்றனர். இதனால் அரசு டாஸ்மாக் கடைகளில் குளிர்ச்சியான பீர் மதுபானம் கிடைக்காமல் இருப்பதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என குடிமகன்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.