பதிவு:2023-04-20 08:53:49
திருவள்ளூரில் நெகிழியன் பயன்பாட்டை குறைக்கும் விதமாக " மீண்டும் மஞ்சப்பை " விழிப்புணர்வு நாடகம் : மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் நேரில் பார்வையிட்டார்
திருவள்ளூர் ஏப் 19 : திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாவட்ட நிர்வாகத்தின் தூய்மை திருவள்ளூர் மாவட்டத்தின் ஒரு பகுதியாகவும்,தமிழ்நாடு அரசின் மீண்டும் மஞ்சப்பைத் திட்டத்தை துரிதமாக செயல்படுத்தி பொதுமக்களிடையே நெகிழியன் பயன்பாட்டை குறைக்கும் விதமாகவும் கொத்தடிமையிலிருந்து மீட்கப்பட்டவர்களால் நடத்தப்பட்ட " மீண்டும் மஞ்சப்பை " நாடகத்தை மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் நேரில் பார்வையிட்டார்.
அதனைத் தொடர்ந்து தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் சார்பாக தயாரிக்கப்பட்ட மஞ்சப்பைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி, பொதுமக்களுக்கு அம்மஞ்சப்பைகளை இலவசமாக மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.
இதில் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் உதவி பொறியாளர் சபரிநாதன், கற்போர் வட்டம் பிரதிநிதி வினோத்,கலை குழுவினர்,பொதுமக்கள் மற்றும் பல்வேறு துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.