முன்னாள் விமானப்படை வீரர்கள் ஆவடி சங்கத்தின் சார்பில் 26 வது ஆண்டு கூட்டம் : திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் பங்கேற்பு :

பதிவு:2023-04-20 08:59:05



முன்னாள் விமானப்படை வீரர்கள் ஆவடி சங்கத்தின் சார்பில் 26 வது ஆண்டு கூட்டம் : திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் பங்கேற்பு :

முன்னாள் விமானப்படை வீரர்கள் ஆவடி சங்கத்தின் சார்பில்  26 வது ஆண்டு  கூட்டம் : திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் பங்கேற்பு :

திருவள்ளூர் ஏப் 19 : ஆவடியில் உள்ள இந்திய வான்படை அலுவலகத்தில் ஜீவி.பிரசாத் அரங்கில் முன்னாள் விமானப்படை வீரர்கள் ஆவடி சங்கத்தின் சார்பில் 26 வது ஆண்டு கூட்டம் நடைபெற்றது. Air Cmde எஸ்.சிவக்குமார் தலைமை தாங்கினார். Veteran Wg.Cdr.மு.பார்த்தசாரதி முன்னிலை வகித்தார். கூட்டத்தில் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் முதன்மை விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

முன்னாள் படை வீரர்களுக்கு அரசினால் வழங்கப்படும் நலத்திட்ட துண்டு பிரசுரங்களை விநியோகம் செய்து அரசின் நலத்திட்ட உதவிகளை திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள முன்னாள்படை வீரர்கள் அதிக அளவில் பெற்று பயனடைய வேண்டுமென விழிப்புணர்வு பிரசாரம் செய்து கேட்டுக்கொண்டார். இக்கூட்டத்தின் மாவட்ட ஆட்சியர் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நடைபெறும் வாராந்திர மாதாந்திர கூட்டத்தின்போதும் மற்றும் காலாண்டிற்கு ஒரு முறைநடத்தப்படும் முன்னாள் படைவீரர் சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டத்தின் போதும் முன்னாள் படை வீரர்கள் தங்களது குறைகளை தெரிவித்து பயனடையுமாறு கேட்டுக்கொண்டார். Veteran Air Mshl எஸ். வர்தமான் மற்றும் அவரது மனைவி ஷோபா வர்தமான் ஆகியோர் கௌரவ விருந்தினராக கலந்து கொண்டனர்.

அதனைத் தொடர்ந்து Veteran Wg.Cdr.மு.பார்த்தசாரதி மனைவி மீராபார்த்தசாரதி மற்றும் ஆவடி வான்படை Air Cmde எஸ் சிவக்குமார் Air Officer Commanding, மனைவி ஷீபா சிவகுமார் ஆகியோர் முன்னாள் படைவீரர்,சார்ந்தோருக்கு பரிசுப்பொருள்கள் வழங்கினர். முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குனர் ஜி.ராஜலட்சுமி அரசின் நலத்திட்டங்கள் குறித்து முன்னாள் படைவீரர்கள் இடையே எடுத்துரைத்தார். கூட்டத்தில் சுமார் 300க்கும் மேற்பட்ட முன்னாள் படை வீரர்கள் மற்றும் அவர்களைச் சார்ந்தோர்கள் கலந்து கொண்டனர்.