பேரம்பாக்கம் லயன்ஸ் கிளப் லியோ கிளப் சார்பில் தீவிபத்து தடுப்பு விழிப்புணர்வு

பதிவு:2023-04-20 09:02:18



பேரம்பாக்கம் லயன்ஸ் கிளப் லியோ கிளப் சார்பில் தீவிபத்து தடுப்பு விழிப்புணர்வு

பேரம்பாக்கம் லயன்ஸ் கிளப் லியோ கிளப் சார்பில் தீவிபத்து தடுப்பு விழிப்புணர்வு

திருவள்ளூர் ஏப் 19 : தமிழ்நாடு அரசு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை சார்பில் ஆண்டுதோறும் ஏப்ரல் 14 முதல் ஏப்ரல் 20-ந்தேதி வரை தீ விபத்து தடுப்பு விழிப்புணர்வு வாரம் கடைபிடிக்கப்படுகிறது .இதையொட்டி பேரம்பாக்கம் லயன்ஸ் கிளப், லியோ கிளப் ஏற்பாட்டில் , தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலைய அதிகாரிகள் பேரம்பாக்கம் மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் வாரம் முழுவதும் தீவிபத்து தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக நரசிங்கபுரம் கிராமத்தில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. நிர்வாகிகள் சேகர், ரமேஷ், கருணாநிதி, முருகையன் ஏற்பாட்டில் பேரம்பாக்கம் தீயணைப்பு நிலைய அலுவலர் வீரராகவன் மற்றும் மீட்புக்குழுவினர் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

அப்போது மக்கள் தங்கள் வீடுகளில் கேஸ் சிலிண்டரால் தீவிபத்து ஏற்பட்டால் எப்படி அதை கையாள்வது என்பதைப் பற்றியும், பாம்புக்கடி, மின்சார தீ விபத்து, சிறு சிறு தீ விபத்துகளால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு முதலுதவி அளிப்பது குறித்தும் விரிவான வகையில் விளக்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதில் நரேஷ் மற்றும் லயன்ஸ் கிளப், லியோ கிளப் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.இதனைத் தொடர்ந்து சிற்றம்பாக்கம், தென்காரனை ஆகிய கிராமங்களிலும் தீ விபத்து தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.