திருவள்ளூர் மாவட்ட இந்து முன்னணி தலைவர் ஆடிட்டர் சுரேஷ்குமார் கொலை வழக்கில் அப்ரூவராக மாறிய குற்றவாளி பாதுகாப்பு கோரி துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் மனு :

பதிவு:2023-04-20 09:10:02

திருவள்ளூர் ஏப் 19 : திருவள்ளூர் மாவட்ட இந்து முன்னணி தலைவராக இருந்த சுரேஷ்குமார் கடந்த 2014 ஆம் ஆண்டு ஜூன் 18-ஆம் தேதி இரவு அம்பத்தூரில் உள்ள தனது கடை அருகே வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தில் அப்துல் ஹக்கீம்.சையத் அலி. நவாஸ். காஜாமொய்தீன். நசீர்ஜலாத்தின். ஜாகுவார் சாதிக் உள்ளிட்ட 16 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில் ஜாகுவார் சாதிக் அரசுக்கு சாதகமாக அப்ரூவராக மாறி வாக்கு மூலம் அளித்து ஜாமினில் வெளியே வந்துள்ளார்.

இதனால் இவருக்கு இந்த வழக்கில் உடன் இருந்தவர்கள் தன்னை காட்டி கொடுத்து விட்டதாக கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. மேலும், இதன் காரணமாக இவர்களை அப்பகுதியில் இருந்து வீட்டை காலி செய்யுமாறு அப்பகுதி மக்களும் அச்சுறுத்துவதாகவும் கூறப்படுகிறது. இதனால் ஜாகுவார் சாதிக் தனது மனைவி மற்றும் பெண் குழந்தைகளுடன் திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு திமுக கொடி கட்டிய காரில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்போடு கலெக்டரை நேரில் சந்தித்து மனு அளிக்க வந்திருந்தார்.

ஆனால் பணி காரணமாக கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் வெளியே சென்றிருந்ததால் அவரின் நேர்முக உதவியாளரை நேரில் சந்தித்து மனு அளித்தனர். ஆனால் சம்பவம் நடந்த இடம் சென்னை பகுதிக்கு உட்பட்டது என்பதால் சென்னை கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்குமாறு அறிவுறுத்தி திருப்பி அனுப்பினர். மேலும் ஜாகுவார் சாதிக் பாதுகாப்பு கோரி அவரது குடும்பத்துடன் வந்திருந்த ஒரு மணி நேரத்திற்கும் மேலாக திருவள்ளூர் டவுன் போலீசார் முழு பாதுகாப்பு அளித்து திருப்பி அனுப்பி வைத்தனர். இதனால் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பாக காணப்பட்டது.