நடுகுத்தகையில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்டம் மற்றும் வட்டார அளவிலான சுகாதாரத் திருவிழா : பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் துவக்கி வைத்தார் :

பதிவு:2022-04-27 14:20:38



நடுகுத்தகையில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்டம் மற்றும் வட்டார அளவிலான சுகாதாரத் திருவிழா : பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் துவக்கி வைத்தார் :

நடுகுத்தகையில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்டம் மற்றும் வட்டார அளவிலான சுகாதாரத் திருவிழா : பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் துவக்கி வைத்தார் :

திருவள்ளூர் ஏப் 27 : திருவள்ளூர் மாவட்டம், பூவிருந்தவல்லி ஊராட்சி ஒன்றியம், நடுகுத்தகை அரசு நடுநிலைப்பள்ளியில் பொது சுகாதாரம் மற்றும் நோய்தடுப்பு மருந்துத் துறை சார்பாக நடைபெறும் கலைஞரின் வருமுன் காப்போம் திட்டம் மற்றும் வட்டார அளவிலான சுகாதாரத் திருவிழாவினை பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர்,மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் முன்னிலையில் துவக்கி வைத்து பார்வையிட்டு பேசினார்.

நாடு முழுவதும் ஏப்ரல் 18 முதல் ஏப்ரல் 30 வரை வட்டார அளவிலான சுகாதார திருவிழா கொண்டாட திட்டமிடப்பட்டுள்ளது. வருமுன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாமில் தாய் சேய் நலம், சிறப்பு பொது மருத்துவமனை இருதய நோய், சர்க்கரை நோய், உயர் இரத்த அழுத்தம், அறுவை சிகிச்சை, எலும்பு மற்றும் மூட்டு சிகிச்சை, காது, மூக்கு, தொண்டை மருத்துவம், பல் மருத்துவம், கண் மருத்துவம், தோல் நோய் சிகிச்சை, புற்று நோய் பரிசோதனை மற்றும் சிகிச்சை, மனநல மருத்துவம், இந்திய முறை மருத்துவம், ஐ.சி.டி.சி. சேவைகள், கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஸ்கேன் பரிசோதனை, குழந்தைகளுக்கான சிறப்பு தடுப்பூசி முகாம், கோவிட்-19 பரிசோதனை மற்றும் சிறப்பு தடுப்பூசி முகாம் ஆகியவை இம்முகாம்களில் உள்ள சிறப்பு மருத்துவப் பிரிவுகளாகும்.

இத்திட்ட முகாமில் இரத்த முழு பரிசோதனை, இரத்த சோகை அளவு பரிசோதனை, இரத்த உறைதலை கண்டறிதல், இ.எஸ்.ஆர்., இரத்த வகை கண்டறிதல், இரத்த சர்க்கரை அளவை கண்டறிதல், இரத்த கொழுப்பளவு, யூரியா கிரியாட்டினின், இரத்த தடவல், டைபாய்டு பால்வி நோய், எச்.ஐ.வி., மஞ்சள் காமாலை-பி, சிறுநீர் முழு பரிசோதனை, கர்ப்பம் உறுதி பரிசோதனை, மலப்பரிசோதனை, சளி பரிசோதனை, கொரோனா பரிசோதனை, மார்பக புற்றுநோய் மற்றும் கருப்பை வாய் புற்றுநோய் பரிசோதனை, இருதய சுருள் வரைபடம் மற்றும் ஸ்கேன் பரிசோதனை போன்ற ஆய்வக பரிசோதனைகள் செய்யப்படுகிறது.

இம்முகாம் காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். மேலும், ஒவ்வொரு மருத்துவ முகாமிலும் பொது மக்களுக்கு வழங்குவதற்கான பரிசோதனை மற்றும் சிகிச்சை அட்டைகள் மற்றும் மருந்துகள் வழங்கப்படும்.நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்ற உணர்வின் அடிப்படையில் இதுவரை தமிழகம் முழுவதும்; 1,248 வருமுன் காப்போம் முகாம்கள் நடைபெற்றிருக்கின்றன. இந்த முகாம்களின் மூலம் 8,64,964 ஏழை – எளிய நபர்கள் பயனடைந்துள்ளனர் என்று கூறினார்.

அதனைத் தொடர்ந்து, கலைஞரின் வருமுன் காப்போம் திட்டம் மற்றும் வட்டார அளவிலான சுகாதாரத் திருவிழாவில் பொதுமக்களுக்கு அளிக்கப்படும் பரிசோதனை மற்றும் சிகிச்சைகளை பால்வளத்துறை அமைச்சர் பார்வையிட்டு, ஊட்டச்சத்து உணவுகளை சாப்பிட்டு;, நடமாடும் இருதய பரிசோதனை மையத்தை பார்வையிட்டார்.

விழாவில், திருவள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினர் கே.ஜெயக்குமார், மாவட்ட ஊராட்சிக் குழு துணைத் தலைவர் தேசிங்கு, ஆவடி மாநகராட்சி மேயர் ஜி.உதயகுமார், சுகாதாரத்துறை துணை இயக்குநர்கள் செந்தில்குமார் (பூவிருந்தவல்லி), கு.ரா.ஜவஹர்லால் (திருவள்ளூர்), உள்ளாட்சி பிரதிநிதிகள், மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்