பதிவு:2023-04-22 16:23:26
ஒன்றிய அரசைக் கண்டித்து திருவள்ளூர் வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் தலைமை தபால் நிலையத்தை முற்றுகையிடும் போராட்டம்
திருவள்ளூர் ஏப் 21 : ஒன்றிய பாஜக அரசைக் கண்டித்து திருவள்ளூர் வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் திருவள்ளூர் தலைமை தபால் நிலையத்தை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்திற்கு மாநில துணைத்தலைவர் ஏகாட்டூர் ஆனந்தன் தலைமை தாங்கினார். நகர் மன்றத் தலைவரும் நகர காங்கிரஸ் கட்சி தலைவருமான வி.இ.ஜான் வரவேற்றார். இதில் நிர்வாகிகள் சி.பி.மோகன்தாஸ், ஜே.கே.வெங்கடேஷ், டி.வடிவேலு, ஜே.டி.அருள்மொழி ஆகியோர் கண்டன உரையாற்றினர்.
இந்த முற்றுகை போராட்டத்தின் போது ஒன்றிய பாஜக அரசு எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலை நேரடியாக சந்திக்க துணிச்சல் இல்லாமல் காங்கிரஸ் கட்சியை பலவீனப்படுத்தும் நோக்கில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் எம் பி பதவியை பறித்ததாக குற்றம் சாட்டினர்.ஒன்றிய அரசின் இந்த செயலைக் கண்டித்து திருவள்ளூர் தலைமை தபால் நிலையத்தை வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியினர் முற்றுகையிட முயன்றனர் ஆனால் அங்கு பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டிருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். இதனையடுத்து ஒன்றிய அரசைக் கண்டித்து முழக்கங்களை எழுப்பினர்.
இந்த முற்றுகைப் போராட்டத்தில் நிர்வாகிகள் எஸ்.எஸ்.சரவணன், எஸ்.சரஸ்வதி செல்வகுமார், பொன்ராஜ், சீனிவாசன், சுந்தரவேல், வி.எஸ்.ரகுராமன், இ.கே.ரமேஷ், கே.டி.பிரகாஷ், செந்தில்குமார், கோடீஸ்வரன், ஜி.எம்.பழனி, முகுந்தன், சதீஷ், எம்.ஜி.ராமன், வி.எம்.தாஸ், சபீர், குப்பன், பாடலீஸ்வரன், ஜனா, அருண்குமார், கார்த்திக், கலீல்ரகுமான், உதயசங்கர், பாஸ்கர், மனோகரன், தயாளன், அன்பு , சிரஞ்சீவி, மோகன்ரகாஜ் உள்பட கலந்து கொண்டனர்.