தொடுகாடு பகுதியில் ஒய் எம் கேட்டரிங் சர்வீஸ் நிறுவனத்திற்கு மூலப்பொருட்கள் வழங்கிய ஒப்பந்ததாரர்களுக்கு ரூ.5 கோடிக்கு மேல் பணம் கொடுக்காமல் ஏமாற்றுவதாக செங்கல்பட்டு திமுக எம்எல்ஏ வரலட்சுமி மதுசூதனன் மீது புகார்

பதிவு:2023-04-22 16:28:03

திருவள்ளூர் ஏப் 22 : திருவள்ளூர் மாவட்டம் தொடுகாடு பகுதியில் அமைந்துள்ள ஒய் எம் கேட்டரிங் சர்வீஸ் என்ற நிறுவனத்திற்கு கடந்த பத்து ஆண்டுகளாக அரிசி காய்கறி உள்ளிட்ட ஏராளமான பொருட்களை தனித்தனி நபர்கள் ஒப்பந்த அடிப்படையில் கொடுத்து வந்துள்ளனர், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு செங்கல்பட்டு சட்டமன்ற உறுப்பினர் வரலட்சுமி மதுசூதனன் ஒப்பந்தம் எடுத்து நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் கேட்டரிங் சர்வீஸ் நிறுவனத்திற்கு பொருட்கள் வழங்கிய பணத்தை ஒப்பந்ததாரர்கள் கேட்டபோது அதை வழங்காமல்10 மாத காலமாக தொழிற்சாலையில் நிர்வாகிகள் இழுத்தடிப்பு செய்து வந்துள்ளார், சில மாதம் ஆன பிறகு இது செங்கல்பட்டு எம்எல்ஏ., வரலட்சுமி மதுசூதனன் என்பவரது கம்பெனி. எனவே நீங்கள் யாரிடம் வேண்டுமானாலும் சொல்லிக் கொள்ளுங்கள் என்று கூறியுள்ளனர், இதனிடையே கடந்த 45 நாட்களுக்கு முன்பு திருவள்ளூர் மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு போலீசாரிடம் ஒப்பந்ததாரர்கள் புகார் அளித்துள்ளனர்.

ஆனால் அந்த புகார் மீது காவல்துறையினர் எந்த நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதனையடுத்து மீண்டும் வந்து கேட்டதற்கு, சம்மன் அனுப்புவோம் என தெரிவித்துள்ளனர். இதனால் தங்கள் பணத்திற்கு என்ன செய்வது என தெரியாமல் உள்ள ஒப்பந்ததாரர்கள், முதல்வரை சந்தித்து புகார் அளிக்க உள்ளதாக தெரிவித்துள்ளனர், திருவள்ளூர் மாவட்டத்தில் தனியார் கேட்டரிங் சர்விஸ் நிறுவனத்திற்கு சப்ளை செய்து வந்த உரிமையாளர்களுக்கு செங்கல்பட்டு திமுக எம்எல்ஏ வரலட்சுமி மதுசூதன் சுமார் ஐந்து கோடி ரூபாய் பணம் கொடுக்காமல் ஏமாற்றியிருக்கும் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.