பதிவு:2023-04-22 16:31:16
அரிசி கடத்தல் வழக்கில் வழக்குப் பதிவு செய்து தலைமறைவாக இருந்த 2 பேர் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர் :
திருவள்ளூர் ஏப் 22 : திருவள்ளுர் மாவட்டத்தில் தமிழக பொது விநியோக திட்டத்தின் கீழ் பொதுமக்களுக்கு மானிய விலையில் வழங்கப்படும் பொருட்கள் கடத்தலை தடுக்கும் பொருட்டும், கடத்தலில் ஈடுபட்டு தலைமறைவாக உள்ள குற்றவாளிகளை கைது செய்யும் பொருட்டு குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத் துறை, கூடுதல் காவல்துறை இயக்குநர் அருண் உத்தரவிட்டார்.
அதன் பேரில் எஸ்.பி.கீதா மேற்பார்வையில்,டிஎஸ்பி நாகராஜன் வழிகாட்டுதலின்படி திருவள்ளூர் இன்ஸ்பெக்டர் சதிஷ் மற்றும் போலீசார் அரிசி கடத்தலில் ஈடுபட்டதாக வழக்கு பதிவு செய்யப்பட்டு தலைமறைவாக இருந்து வந்த பள்ளிப்பட்டு தாலுக்கா பொதட்டூர்பேட்டை அம்பேத்கர் நகர் முதல் தெருவைச் சேர்ந்த நாகப்பன் மகன் சொக்கதங்கம் (21) , மற்றும் திருத்தணி தாலுக்கா அருங்குளம் கிராமம் திரௌபதி அம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த கோவிந்தசாமி் என்பவரின் மகன் சரவணன் (34) ஆகிய இருவரையும் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.