பேரறிஞர் அண்ணா பூங்காவில் பல்வேறு திட்டங்களின் கீழ் ரூ 4.14 கோடி மதிப்பீட்டில் புதிய கட்டிடங்கள் : அமைச்சர்கள் திறந்து வைத்து பார்வையிட்டனர்

பதிவு:2023-04-22 16:37:59



பேரறிஞர் அண்ணா பூங்காவில் பல்வேறு திட்டங்களின் கீழ் ரூ 4.14 கோடி மதிப்பீட்டில் புதிய கட்டிடங்கள் : அமைச்சர்கள் திறந்து வைத்து பார்வையிட்டனர்

பேரறிஞர் அண்ணா பூங்காவில் பல்வேறு திட்டங்களின் கீழ் ரூ 4.14 கோடி மதிப்பீட்டில் புதிய கட்டிடங்கள் : அமைச்சர்கள் திறந்து வைத்து பார்வையிட்டனர்

திருவள்ளூர் ஏப் 22 : திருவள்ளூர் மாவட்டம், வில்லிவாக்கம் ஊராட்சி ஒன்றியம், அயப்பாக்கம் ஊராட்சிக்குட்பட்ட டிஎன்எச்பி பகுதியில் உள்ள பேரறிஞர் அண்ணா பூங்காவில் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் தொகுதி மேம்பாட்டு நிதி, நமக்கு நாமே திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களின் கீழ் ரூ 4.14 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள முத்தமிழறிஞர் டாக்டர்.கலைஞர் நூலகம், யோகா மண்டபம், விளையாட்டு மைதானங்கள், மகளிர் சுய உதவி குழுவினருக்கான சிறப்பு அங்காடிகள் உள்ளிட்ட பல்வேறு புதிய கட்டிடங்களை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திருப்பெரும்புதூர் நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு, ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் இ.பெரியசாமி,மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணஆகியோர் திறந்து வைத்து பார்வையிட்டனர்.

அதனைத் தொடர்ந்து பால்வளத்துறை அமைச்சர் தெரிவித்ததாவது : அயப்பாக்கம் ஊராட்சியில் அமைந்துள்ள இப்பூங்காவினை சுற்றி சுமார் 5000 குடியிருப்புகள் அமைந்துள்ளன. இப்பகுதியில் உள்ள பொதுமக்களால் நடைபயிற்சி, உடற்பயிற்சி, யோகா ஆகியவை தினசரி மேற்கொள்ளப்பட்டு வருவதால் பொதுமக்கள் நலன் கருதி பூங்காவினை மேம்பாடு செய்ய உத்தேசிக்கப்பட்டு அரசால் அறிவிக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டம், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டம், நமக்கு நாமே திட்டம், 14-வது, 15-வது நிதிக்குழு மான்ய திட்டம் ஆகிய திட்டங்களை ஒருங்கிணைக்கப்பட்டு ரூ.414.67 இலட்சம் மதிப்பீட்டில் திருபெருமந்தூர் நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி திட்டத்தின் கீழ் பேரறிஞர் அண்ணா எழில்மிகு பசுமை பூங்காவில் நூலக கட்டிடம் அமைத்தல்.

பேரறிஞர் அண்ணா எழில்மிகு பசுமை பூங்காவில் யோகா மண்டபம், உயர்மின் கோபுரமின் விளக்கு அமைத்தல், நமக்கு நாமே திட்டத்தின் கீழ் நடைபாதை டைல்ஸ் இஸ்டீல் கைப்பிடி கம்பி அமைத்தல், 8 வடிவ நடைபாதை – 3, சிறுவர் விளையாட்டுதிடல் - 3, வெளிப்புற உடற்பயிற்சி பொருட்கள், வண்ண மலர்கள் தோட்டம் அமைத்தல் உள்ளிட்ட பணிகள் பல்வேறு திட்டங்களின் கீழ் ரூ.4.14 கோடி மதிப்பீட்டில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு, பூங்கா அமைக்கப்பட்டுள்ளது என, அமைச்சர் கூறினார்.

அதனைத் தொடர்ந்து பல்வேறு திட்டங்களின் கீழ் ரூ.4.14 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள முத்தமிழறிஞர் டாக்டர்.கலைஞர் நூலகம், யோகா மண்டபம், விளையாட்டு மைதானங்கள், மகளிர் சுய உதவி குழுவினருக்கான சிறப்பு அங்காடிகள் உள்ளிட்ட பல்வேறு புதிய கட்டிடங்களுக்கான கல்வெட்டுகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திருப்பெரும்புதூர் நாடாளுமன்ற உறுப்பினர், ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர்,மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர்,பால்வளத்துறை அமைச்சர் ஆகியோர் முன்னிலையில் திறந்து வைத்தார். முன்னதாக, இவ்விழாவில் வள்ளுவப் பெருமானின் திருவுருவ சிலையை திறந்து வைத்து, சிறுவர், சிறுமியர்களின் கலை நிகழ்ச்சிகளை பார்வையிட்டனர்.

இதில் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ்,மதுரவாயல் சட்டமன்ற உறுப்பினர் க.கணபதி, மாவட்ட ஊராட்சி குழு தலைவர் கே.வி.ஜி.உமா மகேஸ்வரி, துணைத்தலைவர் தேசிங்கு, திட்ட இயக்குனர் (மகளிர் திட்டம்) மலர்விழி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை செயற் பொறியாளர் ராஜவேல், ஊராட்சிகள் உதவி இயக்குநர் ரூபேஷ், திருவள்ளூர் வருவாய் கோட்டாட்சியர் மை.ஜெயராஜ் பௌலிங், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பாஸ்கர், மம்மு, அயப்பாக்கம் முதல் நிலை ஊராட்சி தலைவர் துரை வீரமணி, உள்ளாட்சி பிரதிநிதிகள், பொதுமக்கள் மற்றும் பல்வேறு துறை அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.