பதிவு:2023-04-22 16:36:34
மணவாளநகரில் திருவள்ளூர் மேற்கு மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் மாவட்ட செயற்குழு கூட்டம்
திருவள்ளூர் ஏப் 22 : மருத்துவர் அய்யா அவர்களின் ஆணைக்கிணங்க, மருத்துவர் சின்னைய்யா அவர்களின் ஆலோசனைப்படி மணவாளநகரில் திருவள்ளூர் மேற்கு மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் மாவட்ட செயற்குழு கூட்டம் நடைபெற்றது. மேற்கு மாவட்ட செயலாளர் இ.தினேஷ் குமார் தலைமை தாங்கினார்.
கூட்டத்தில் 10.5 சதவிகித உள் இட ஒதுக்கீடுக்கான கடிதத்தை முதலமைச்சர் மற்றும் நீதியரசர் ஆகியோருக்கு வழங்கியதை தொடர்ந்து,கடம்பத்தூர், திருவாலங்காடு, பூண்டி ஆகிய ஒன்றியங்களில் கட்சி நிர்வாகிகள் கிராமம் தோறும் சென்று மக்களை அணுகி விழிப்புணர்வை ஏற்படுத்தி, அவர்களிடத்தில் கையெழுத்து பெற்று வருமாறு ஒன்றிய செயலாளர்கள் இடத்தில் அதற்கான கடிதத்தை பிரித்து வழங்கி,தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதில் சமூக முன்னேற்ற சங்க மண்டல பொருளாளர் செல்வம்,மாநில செயற்குழு உறுப்பினர்கள் கேசவன், கணேஷ், மாவட்ட பொருளாளர் சித்ரா, மாவட்ட துணை செயலாளர் குமார், கொள்கை பரப்பு செயலாளர் வாசுதேவன்,ஒன்றிய செயலாளர்கள் விஜயராகவன், கேசவன், வினோத், சண்முகம் உள்பட பலர் கலந்து கொண்டனர். இறுதியில் ஒன்றிய தலைவர் மணி நன்றி கூறினார்.