ஆவடியில் இராணுவ ஓய்வூதியம் மற்றும் ஒரு பதவி ஒரு ஓய்வூதியம் நிலுவைத்தொகை தொடர்பான விளக்க பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளது : மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தகவல்

பதிவு:2023-04-22 16:39:22

திருவள்ளூர் ஏப் 22 : திருவள்ளூர் மாவட்டம் சென்னை - 54 ஆவடியில் உள்ள CVRDE Auditorium-ல் 24.04.2023 அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரையில் இராணுவ ஓய்வூதியம் மற்றும் ஒரு பதவி ஒரு ஓய்வூதியம் நிலுவைத்தொகை தொடர்பான விளக்க பொதுக்கூட்டம் பாதுகாப்பு கணக்கு கட்டுப்பாட்டு அலுவலகம், சென்னை மூலமாக இராணுவ ஓய்வூதிய அதிகாரிகளின் தலைமையில் நடைபெற உள்ளது.

இதில் திருவள்ளுர் மாவட்டத்தைச் சார்ந்த முப்படை இராணுவ ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் கலந்து கொண்டு ஓய்வூதியம் மற்றும் ஒரு பதவி ஒரு ஓய்வூதியம் நிலுவைத்தொகை தொடர்பான அனைத்துவிதமான சந்தேகங்கள் மற்றும் குறைகளுக்கான தீர்வினை பெறலாம்.

மேலும் விவரங்களுக்கு, தொலைபேசி எண்:044-24353453, மின்னஞ்சல் : dpdochn.dad@nic.in தொடர்புகொள்ளலாம் என திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.