பதிவு:2023-04-23 18:14:53
சவீதா சட்ட கல்லூரியின் சார்பாக சட்ட விழிப்புணர்வு முகாம்
திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காட்டில், ஏப்ரல் 21, 2023 அன்று சவீதா சட்ட கல்லூரியின் சார்பாக சட்ட விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டது. திருமதி கிறிஸ்டி எப்சியால் அவர்கள் தலைமையில் மாணவர் ஒருங்கிணைப்பாளர்கள் ஹாரிஷா, தருண் பாலாஜி மற்றும் சவீதாவின் மாணவர் குழு இணைந்து நிகழ்ச்சிகள் நடத்தினர். இந்நிகழ்ச்சியில் சொற்பொழிவு மற்றும் குருநாடகங்கள் வழியாய் இந்திய குடிமகனின் வாக்குரிமை, கல்வி உரிமை, நில உரிமை மற்றும் பல சட்ட ஆலோசனைகளும் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் கிராம மக்கள் பலரும் ஆர்வத்துடன் கலந்துகொண்டு பயனடைந்தனர்.