திருத்தணி சதாசிவ குளம் மையப் பகுதியில் 23 அடி உயரத்தில் அமைக்கப்பட்ட தியானேஸ்வரர் சிலைக்கு மகா கும்பாபிஷேகம் :

பதிவு:2023-04-24 14:59:09



திருத்தணி சதாசிவ குளம் மையப் பகுதியில் 23 அடி உயரத்தில் அமைக்கப்பட்ட தியானேஸ்வரர் சிலைக்கு மகா கும்பாபிஷேகம் :

திருத்தணி சதாசிவ குளம் மையப் பகுதியில் 23 அடி உயரத்தில் அமைக்கப்பட்ட தியானேஸ்வரர் சிலைக்கு மகா கும்பாபிஷேகம் :

திருவள்ளூர் ஏப் 24 : திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி பழைய தர்மராஜா கோயில் அருகில் புராதன மனோன்மணி சமேத சதாசிவ லிங்கேஸ்வரர் திருக்கோயிலில் 12 ஆண்டுகளுக்குப் பிறகு திருக்கோயில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டது. சதாசிவ திருக்குளம் மையப் பகுதியில் உபயதாரர்கள் மற்றும் பக்தர்கள் நிதி உதவியுடன் 23 அடி உயரத்தில் தியானேஸ்வரர் சிலை அமைக்கப்பட்டு சிலைப் பகுதிக்கு பக்தர்கள் சென்று சுவாமி தரிசனம் செய்ய ஏதுவாக ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் சிலைக்கு பீடம் மற்றும் குளம் நடுவில் நடைமேடை அமைக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து மூன்று நாட்கள் நடைபெற்ற மகா கும்பாபிஷேக விழாவை யொட்டி திருக்கோயில் மற்றும் குளம் சுற்றி வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு திருக்கோயில் வளாகத்தில் யாகசாலைகள் அமைக்கப்பட்டு நித்திய ஹோம பூஜைகள் நடைபெற்றது. மகா பூர்ணாஹுதி பூஜைகள் தொடர்ந்து புனித நீர் கலசங்கள் புறப்பாடு நடைபெற்றது. இதில் திருத்தணி சுற்றுவட்டார பகுதிகளிருந்து பெரும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

சிவ பூத வாத்தியங்கள் முழங்க புனித நீர் கலசங்கள் புறப்பாடு நடைபெற்று திருக்கோயில் கோபுர குலசம் திருக்குளத்தில் அமைக்கப்பட்டுள்ள தியானேஸ்வரர் சிலைக்கு சிவாச்சாரியார்கள் புனித நீரால் மகா கும்பாபிஷேகம் செய்து புனித நீர் பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது. பக்தர்கள் சிவசிவ பக்தி பரவசத்துடன் தரிசனம் செய்து வழிபட்டனர். திருக்கோவில் நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.