திருமழிசை சுந்தரம் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் மாபெரும் தனியார் வேலைவாய்ப்பு முகாமில் 203 நபர்களுக்கு பணி நியமன ஆணைகள் : பூவிருந்தவல்லி சட்டமன்ற உறுப்பினர் ஆ.கிருஷ்ணசாமி வழங்கினார்

பதிவு:2023-04-24 15:02:08



திருமழிசை சுந்தரம் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் மாபெரும் தனியார் வேலைவாய்ப்பு முகாமில் 203 நபர்களுக்கு பணி நியமன ஆணைகள் : பூவிருந்தவல்லி சட்டமன்ற உறுப்பினர் ஆ.கிருஷ்ணசாமி வழங்கினார்

திருமழிசை சுந்தரம் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் மாபெரும் தனியார் வேலைவாய்ப்பு முகாமில் 203 நபர்களுக்கு பணி நியமன ஆணைகள் : பூவிருந்தவல்லி சட்டமன்ற உறுப்பினர் ஆ.கிருஷ்ணசாமி வழங்கினார்

திருவள்ளூர் ஏப் 24 : திருவள்ளூர் மாவட்டம், திருமழிசை பகுதியில் உள்ள சுந்தரம் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு அளித்திடும் வகையில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மற்றும் வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் சார்பாக நடைபெற்ற மாபெரும் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது.பூவிருந்தவல்லி சட்டமன்ற உறுப்பினர் கிருஷ்ணசாமி தலைமை தாங்கினார்.கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி),மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலர் செ.ஆ.ரிஷப் முன்னிலையில் வகித்தார்.

முகாமில் திருவள்ளூர் மாவட்டத்தில் 2022-23 ஆண்டில் படித்து வேலை வாய்ப்பற்ற ஆண்,பெண் மற்றும் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு வேலை வாய்ப்பு அளித்திடும் வகையில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மற்றும் வேலை வாய்ப்பு (ம) தொழில்நெறி வழிகாட்டு மையம் சார்பாக மாபெரும் தனியார் வேலைவாய்ப்பு முகாம் காலை 9 மணி முதல் நடைபெற்றது. இம்முகாமில் படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு அளித்திடும் வகையில் பல்வேறு வகையான வேலை வாய்ப்புகள் வழங்கக்கூடிய முன்னணி தனியார் தொழில் நிறுவனங்கள் கலந்து கொண்டனர்.

இம்முகாமிற்கு குறைந்தபட்ச கல்வி தகுதியாக 8,10,12, பட்டப் படிப்பு, ஐடிஐ, டிப்ளமோ பட்டப்படிப்பு, ஓட்டுநர் பயிற்சி முடித்தவர்கள் டெய்லரிங் தொழில் கல்வி பயின்ற ஆண் பெண் மற்றும் மூன்றாம் பாலினத்தவர்கள் என மொத்தம் 615 இளைஞர்கள் உரிய வயது கல்வி தகுதி முதலான முக்கிய ஆவணங்களுடன் இம்முகாமில் கலந்து கொண்டு, தங்கள் வேலை வாய்ப்பினை உறுதி செய்வதற்கு பதிவு செய்து கொண்டனர்.

இதனை தொடர்ந்து, இவ்வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொண்ட இளைஞர்களின் தேர்வு செய்யப்பட்ட 203 இளைஞர்களுக்கு பூவிருந்தவல்லி சட்டமன்ற உறுப்பினர் ஆ.கிருஷ்ணசாமி பணி நியமன ஆணைகளை வழங்கி, வாழ்த்து தெரிவித்தார்.

இதில் தமிழ்நாடு மாநில ஊரக நகர்ப்புற வாழ்வாதார இயக்க திட்ட இயக்குனர் மலர்விழி, பேரூராட்சி துணைத் தலைவர் திரு.மகாதேவன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராம்குமார், சி.காந்திமதி நாதன், உதவி திட்ட அலுவலர்கள் வீரமணி, கல்பனா ராமதாஸ்,ராஜேஷ், சந்திரசேகரன், பல்வேறு தொழில் நிறுவனங்களில் பிரதிநிதிகள் இளைஞர்கள் பொதுமக்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.