திருவள்ளூர் மேற்கு மாவட்ட அதிமுக சார்பில் மகளிர் அணி ஆலோசனைக் கூட்டம் : முன்னாள் அமைச்சர் பா.வளர்மதி பங்கேற்று சிறப்புரை

பதிவு:2023-04-27 08:42:27



திருவள்ளூர் மேற்கு மாவட்ட அதிமுக சார்பில் மகளிர் அணி ஆலோசனைக் கூட்டம் : முன்னாள் அமைச்சர் பா.வளர்மதி பங்கேற்று சிறப்புரை

திருவள்ளூர் மேற்கு மாவட்ட அதிமுக சார்பில் மகளிர் அணி ஆலோசனைக் கூட்டம் : முன்னாள் அமைச்சர் பா.வளர்மதி பங்கேற்று சிறப்புரை

திருவள்ளூர் ஏப் 26 : திருவள்ளூர் மேற்கு மாவட்ட அதிமுக சார்பில் மகளிர் அணி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான பி.வி.ரமணா தலைமை தாங்கினார்.இந்த கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் பா.பென்ஜமின், அப்துல்ரஹீம் மற்றும் திருவள்ளூர் தெற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் எம்எல்ஏ.வுமான பி அலெக்சாண்டர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.மாவட்ட இணை செயலாளர் ஆர். விஜயலட்சுமி இராமமூர்த்தி வரவேற்றார். நகர மகளிரணி கிளைக் கழக செயலாளர் எம்.திலகவதி முனிரத்தினம் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார்.

இந்த கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக அதிமுக மகளிர் அணி செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பா.வளர்மதி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது, எம்ஜிஆர். ஜெயலலிதாவின் கொள்கைகளை நாம் பின்பற்ற வேண்டும். தற்போது அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி நியமிக்கப்பட்ட பிறகு அதிமுக மேலும் புத்துணர்ச்சி பெற்று வருகிறது. அதிமுகவில் அதிகளவில் உறுப்பினர்கள் சேர்ந்து வருகின்றனர். அதே போல் பெண்களும் அதிகளவில் உறுப்பினர்களை சேர்க்க வேண்டும். சமையல் செய்யும் அடிமைகளாக இல்லாமல் நாமும் வாழ்வில் முன்னேற வேண்டும். ஜெயலலிதாவை உலகமே இரும்பு பெண்மணி என புகழந்தது. அதற்கு காரணம் அவரது துணிச்சல் மட்டுமே. அதே போல் பெண்களாகிய நாமும் வாழ்வில் முன்னேற வேண்டும். அதற்காக கடுமையாக உழைக்க வேண்டும் என்றும் பேசினார்.

இந்த கூட்டத்தில் மாவட்ட மகளிர் அணியைச்சேர்ந்த கடம்பத்தூர் ஒன்றிய குழு தலைவர் சுஜாதா சுதாகர், ரமணி சீனிவாசன், இந்திரா வரதராஜன், தமிழ் செல்வி, தேவி பாபு, பிரியங்கா சேகர், கோட்டீஸ்வரி நாகராஜ், எஸ்.நாகம்மாள்சேகர், சித்ரா விஸ்வநாதன், சுலோசனா மோகன்ராவ், சரஸ்வதி ஞானகுமார் உள்பட மகளிர் அணி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.