பதிவு:2023-04-27 08:49:07
ரூ.33 கோடியில் புதிய நவீன பேருந்து நிலையம் அமைக்க அரசாணை வெளியீடு : திருவள்ளூர் நகரமன்றத் தலைவர் நன்றி தெரிவித்து தீர்மானம்
திருவள்ளூர் ஏப் 26 : திருவள்ளூர் நகர மன்ற மாதாந்திர கூட்டம் ஆர் மன்ற தலைவர் உதய மலர் பாண்டியன் தலைமையில் நடைபெற்றது. நகர் மன்றத் துணைத் தலைவர் சி.சு.ரவிச்சந்திரன் முன்னிலை வகித்தார். நகராட்சி ஆணையர் கா.ராஜலட்சுமி வரவேற்றார்.திருவள்ளூர் நகராட்சியில் உள்ள 27 வார்டுகளிலும் தெரு நாய்களின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இந்த நாய்களை பிடித்து குடும்ப கட்டுப்பாடு செய்யும் திட்டம் செயல்படுத்தப்படாததால் தெருநாய்கள் எண்ணிக்கை பன்மடங்கு அதிகரித்துள்ளது.மேலும், தெருக்களில் செல்லும் வாகன ஓட்டிகள், இரவு நேரம் செல்லும் பெண்களை தெரு நாய்கள் கடிக்க துரத்துகின்றன.
எனவே தெரு நாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த வேண்டும். நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நீர்வரத்து கால்வாய்களை சீரமைக்க வேண்டும் என கவுன்சிலர்கள் கோரிக்கை விடுத்தனர். இதனைத் தொடர்ந்து, நடந்துமுடிந்த சட்டமன்றத் தேர்தலில் கொடுத்த வாக்குறுதியின் படி திருவள்ளூர் மாவட்ட தலைநகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்க புதிய பேருந்து நிலையத்தை ரூ.33 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்க திமுக தலைமையிலான அரசு உத்தரவு வழங்கியிருந்தது. இந்நிலையில் அதற்கான அரசாணை வெளியிடப்பட்டது.
இதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் பொது மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றிய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என். நேரு, பால்வளத்துறை அமைச்சர் ஆவடி சா.மு.நாசர், திருவள்ளூர் மேற்கு மாவட்ட செயலாளர் திருத்தணி எஸ்.சந்திரன் எம்எல்ஏ திருவள்ளூர் எம்எல்ஏ வி.ஜி.ராஜேந்திரன் ஆகியோருக்கும் நகர்மன்றத்தலைவர் உதயமலர் பாண்டியன் நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றினார். இதனைத் தொடர்ந்து வார்டு உறுப்பினர்களும் இந்த தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவித்தனர். அதே போல் திருவள்ளூர் முதல் நிலை நகராட்சியை தேர்வு நிலை நகராட்சியாக தரம் உயரத்தியதற்கும் இந்த கூட்டத்தில் நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கூட்டத்தில் நகர்மன்ற உறுப்பினர்கள் வசந்தி வேலாயுதம், வி.சுமித்ரா வெங்கடேசன், பி.நீலாவதி, அம்பிகா ராஜசேகர், கே.பிரபாகரன், ஆர்.பிரபு, அயூப் அலி, டி.கே.பாபு, வி.ஏ.ஜான், ஜி.ஆர்.ராஜ்குமார் (எ) தாமஸ், பத்மாவதி ஸ்ரீதர், அருணா ஜெய்கிருஷ்ணன், டி.செல்வகுமாரன், பி.இந்திரா, வி.சீனிவாசன், எ.எஸ்.ஹேமலதா, ஆர்.விஜயகுமார், வி.எம்.கமலி, வி.சித்ராவிஸ்வநாதன், எல்செந்தில்குமார், க.விஜயலட்சுமி, எஸ்.தனலட்சுமி மற்றும் நகராட்சி சுகாதார அலுவலர் கே.ஆர்.கோவிந்தராஜு உள்ளிட்ட நகராட்சி அதிகாரிகள் கலந்து கொண்டனர்.