பதிவு:2022-04-27 14:48:22
கல்யாண குப்பம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் மாநிலம் தழுவிய பள்ளி மேலாண்மைக் குழுக்கள் மறுகட்டமைப்பு கூட்டம் :
திருவள்ளூர் ஏப் 27: திருவள்ளூர் ஒன்றியம், கல்யாண குப்பம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் மாநிலம் தழுவிய பள்ளி மேலாண்மைக் குழுக்கள் மறுகட்டமைப்பு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மேற்பார்வையாளர் தா. மீகாவேல் தலைமை தாங்கி பேசினார்.
பள்ளியின் முன்னேற்றத்திற்காகவும் பள்ளி வளர்ச்சிக்கு துணை நிற்கவும் குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமைச்சட்டம்-2009 ன்படி பள்ளி மேலாண்மைக்கு குழு உருவாக்கப்பட்டது. குழந்தைகளின் தரமானக் கல்வியை உறுதி செய்திடவும் அரசு பற்றிகளை மேம்படுத்துவதற்கும் பெற்றோர்களின் பங்கேற்பு மிக முக்கியமானது என்று கல்வி உரிமை சட்டம் வலியுறுத்துகிறது என்று தெரிவித்தார்.
பின்னர் கல்யாண குப்பம் ஊராட்சி தலைவர் சுமிதா சுந்தர் கலந்து கொண்டு பள்ளி வளர்ச்சி குறித்து உரை நிகழ்த்தினார். தலைமை ஆசிரியர் அகஸ்தியாள் ஸ்கூல் மேனேஜ்மேட் கமிட்டி குறித்தும் அதன் செயல்பாடுகள் குறித்து விரிவாக விளக்கினார். அதனைத் தொடர்ந்து ஸ்கூல் மேனேஜ்மேட் கமிட்டி கூட்டத்தை மறுகட்டமைப்பு செய்தார்.15 பெற்றோர்கள், 2 ஆசிரியர் பிரதிநிதிகள், மக்கள் பிரிதிநிதிகள் இரண்டு பேர், ஒரு கல்வியாளர் என மொத்தம் 20 பேர் கொண்ட குழு உருவாக்கப்பட்டது. அப்பொழுதே உறுப்பினர்களுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டதற்கான சான்றிதழ் வழங்கப்பட்டது.
இதனையடுத்து தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களை கொண்டு தலைவர் மற்றும் துணை தலைவர் பதவிக்கு தேர்வு செய்யப்பட்டு பதவி ஏற்று கொண்டு, உறுதி மொழியும் ஏற்று கொண்டனர். இறுதியாக ஆசிரியர் ரஞ்சனி நன்றி கூறினார்.