திருவள்ளூரில் விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம் : ரூ 25.66 இலட்சம் மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் வழங்கினார் :

பதிவு:2023-05-01 14:52:29



திருவள்ளூரில் விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம் : ரூ 25.66 இலட்சம் மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் வழங்கினார் :

திருவள்ளூரில் விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம் : ரூ 25.66 இலட்சம் மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் வழங்கினார் :

திருவள்ளூர் ஏப் 29 : திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பாக விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தலைமை தாங்கி பேசினார்.

திருவள்ளூர் மாவட்டத்தில் கிலோ ஒன்றுக்கு ரூ.4.80 வீதம் கொள்முதல் விலை உயர்த்தப்பட்டு ரூ.77.55 என்ற விலைக்கு விவசாயிகளிடமிருந்து ஒரு ஹெக்டருக்கு 384 கிலோ பச்சைப்பயறு வீதம் 1200 மெ.டன் அளவிற்கு கொள்முதல் செய்ய அரசு உத்தரவிட்டுள்ளது. திருவள்ளூர், செங்குன்றம் மற்றும் ஊத்துக்கோட்டை ஓழுங்குமுறை விற்பனைக்கூடங்களை 29.05.2023க்குள் தங்களின் ஆதார் எண், வங்கிக் கணக்குப் புத்தகம், நிலச்சிட்டா மற்றும் அடங்கல் சான்றிதழ்கள் ஆகியவற்றுடன்அணுகி எவ்வித புகாருக்கும் இடமளிக்காமல் முன்பதிவு செய்து பயன்பெறலாம்.

விவசாயிகள் சம்மந்தப்பட்ட வட்டாட்சியரை அணுகி விவசாய பயன்பாட்டிற்கு வண்டல் மண், களிமண் ஆகியவற்றை அரசின் வழிகாட்டுதல் மற்றும் விதிமுறைகள்படி எவ்வித புகாருக்கும் இடமளிக்காமல் பயன்படுத்த வேண்டும்.திருவள்ளூர் மாவட்டத்தில் நடப்பு நவரைப் பருவத்தில் முதற்கட்டமாக திருவள்ளூர், கடம்பத்தூர், ஆர்.கே.பேட்டை, திருவாலங்காடு, பூண்டி, திருத்தணி எல்லாபுரம் மற்றும் பள்ளிப்பட்டு ஆகிய 8 வட்டாரங்களில் 48 இடங்களில் அரசு கட்டிடங்களில் மட்டுமே உரிய நேரத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறப்பதற்கு மாவட்ட நிர்வாகத்தின் மூலம் உத்தரவிடப்பட்டு 45 நேரடி நெல்கொள்முதல் நிலையங்களில் நெல் கொள்முதல் பணி நடைபெற்று வருகிறது.

இதுவரை 2921 விவசாயிகள் முன்பதிவு செய்துள்ளனர். 1390 விவசாயிகளிடமிருந்து 8694.28 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இரண்டாம் கட்டமாக அம்பத்தூர், பூந்தமல்லி, மீஞ்சூர், சோழவரம் மற்றும் கும்மிடிப்பூண்டி ஆகிய ஜந்து வட்டாரங்களில் 14 இடங்களில்நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பதற்கு இன்று மாவட்ட நிர்வாகத்தின் மூலம் ஆணை வழங்கப்படும்.அதனைத் தொடர்ந்து, விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்தனர்.இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் விவசாயிகளிடமிருந்து 154 கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

பின்னர், இக்கூட்டத்தில் வேளாண் பொறியியல் துறை சார்பாக 2 விவசாயிகளுக்கு தலா ரூ.8.5 இலட்சம் மதிப்பீட்டிலான 2 டிராக்டர்களும் 2 விவசாயிகளுக்கு தலா ரூ2.33 இலட்சம் மதிப்பீட்டிலான 2 பவர் ட்ரில்லர்களும் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்ட கிராமங்களில் உள்ள 4 மாற்றுத்திறனாளிகள் மற்றும் 4 ஆதரவற்ற விதவைகளுக்கு கூட்டுறவுத்துறை மூலமாக தலா ரூ50,000 வீதம் 4 இலட்சம் மதிப்பீட்டிலான கடன் உதவிகளும் என மொத்தம் 12 பயனாளிகளுக்கு ரூ25.66 இலட்சம் மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.

கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் அசோகன், வேளாண்மை இணை இயக்குனர் சுரேஷ், மாவட்ட ஆட்சியர் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) எபினேஷன், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் சண்முகவள்ளி, உதவி வன பாதுகாப்பாளர் ஆர்.ராதை, தமிழ்நாடு நுகர் பொருள் வாணிபக் கழக மண்டல மேலாளர் சேகர், திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலை மேலாண்மை இயக்குனர் மலர்விழி, விவசாயிகள், பொதுமக்கள் மற்றும் பல்வேறு துறை அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.