பதிவு:2023-05-01 14:59:02
திருத்தணியில் 25 ஆண்டுகளுக்கு முன்பு பயின்ற முன்னாள் அரசுப்பள்ளி மாணவர்கள் சந்திப்பு : உணவை மாறி மாறி ஊட்டிக் கொண்டும், செல்ஃபி எடுத்தும் உற்சாகம் : ஆசிரியர்களை கவுரவித்து மகிழ்ச்சி
திருவள்ளூர் மே 01 : திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே மத்தூர் அரசு மேல் நிலைப் பள்ளியில் கடந்த 1997 ஆம் ஆண்டு பிளஸ் -2 படித்த 100- க்கும் மேற்ப்பட்ட மாணவ, மாணவியர் பள்ளிப்படிப்பு முடிந்த கையோடு அவரவர் வழியில் பிரிந்துச் சென்றுவிட்டனர். அவர்களில் பலர் உயர் கலவி கற்று அரசு மற்றும் தனியார் துறைகளில், பணியாற்றிக் கொண்டு உள்நாடு மட்டுமின்றி வெளிநாடுகளில் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில் பள்ளி படிப்பு முடித்து 25 ஆண்டுகள் கடந்து விட்ட நிலையில் வாழ்வில் சிறந்த நிலைக்கு முன்னேற தூண்களாக இருந்து கல்வி கற்பித்த ஆசிரியர்கள், வகுப்பறையில் ஒன்றாக அமர்ந்து படித்த முன்னாள் மாணவர்களை சந்திப்பு நிகழ்ச்சிக்காக சில முன்னாள் மாணவர்கள் கடந்த இரண்டு ஆண்டுகளாக வாட்ஸ் ஆப் குழு மூலம் தேடல் மேற்கொண்டு ஆசிரியர்கள், மாணவர்களை ஒருங்கினைத்தனர். இதனை அடுத்து திருத்தணியில் தனியார் கூட்ட அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வெளி நாடுகள் உட்பட பல்வேறு பகுதிகளிலிருந்தும் முன்னாள் மாணவர்கள் 70-க்கும் மேற்ப்பட்டோர் அவர்களது குடும்பங்களுடன் மலரும் நினைவுகள் நிகழ்ச்சியில் சந்தித்துக்கொண்டனர்.
இதனை பெரும் மகிழ்ச்சி பொங்க கொண்டாடி மகிழ்ந்தனர். அதே நேரத்தில் தங்களுக்கு கல்வி கற்பித்த ஆசிரியர்களிடம் ஆசிப்பெற்று நினைவு பரிசு வழங்கி கௌரவித்தனர். இந்த நிகழ்ச்சியில் முன்னாள் மாணவர்கள் சந்தித்துக்கொண்ட மகிழ்ச்சியில் குடும்பத்துடன் அட்டம், பாட்டம் கொண்டாட்டம் கலைகட்டி காணப்பட்டது. மேலும் நீண்ட நாட்களுக்குப் பிறகு சந்தித்துக் கொண்டதால் செல்பி எடுத்துக் கொண்டும் சாப்பிடும் போது மாணவப் பருவத்தில் மாறி மாறி ஊட்டி கொண்டதை போல தற்போதும் மாணவர்கள் உணவை மாறி மாறி ஊட்டி சாப்பிட்டு பழைய நினைவுகளை சொல்லி மகிழ்ந்தனர்.